பி.எம் கேர்ஸ் நிதியின் அறங்காவலராக டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவர் ரதன் டாடா நியமிக்கப்பட்டுள்ளார்.
நாட்டில், கோவிட் வைரஸ் பரவல் அதிகரித்தபோது, அதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்காக, 'பிஎம் கேர்ஸ்' என்ற புதிய நிதியத்தை, பிரதமர், நரேந்திர மோடி, 2020ம் ஆண்டு மார்ச் 27ல் அறிவித்தார்.
இந்த நிதியத்திற்கு, பல்வேறு தனியார் நிறுவனங்கள், அமைப்புகள் நன்கொடைகள் அளித்தன. இந்த பிஎம் கேர்ஸ் அறக்கட்டளையில் பிரமதர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ராஜ்நாத் சிங் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்நிலையில் பி.எம்.கேர்ஸ் நிதியை செலவழிப்பதை பற்றியும், ஆவசர காலத்தில் அதை எப்படி பயன்படுத்தலாம் என்றும் பிரதமர் மோடி கடந்த செவ்வாய்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டார்.
Also Read : 'பி.எம். கேர் நிதி' அரசின் அமைப்பு அல்ல - RTI மூலம் கேள்வி எழுப்ப முடியாது என பிரதமர் அலுவலகம் விளக்கம்
இந்தக் கூட்டத்தில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ், முன்னாள் துணை சபாநாயகர் கரியா முண்டா, தொழிலதிபர் டாடா சன்ஸ் குழுமத்தின் ஒட்டுமொத்த தலைவர் ரத்தன் டாடா ஆகியோர் 'பிஎம் கேர்ஸ்' அறக்கட்டளையின் அறங்காவலர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் ரத்தன் டாடா 'பிஎம் கேர்ஸ்' அறக்கட்டளையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பி.எம் கேர்ஸ் இந்திய அரசின் அறக்கட்டளை இல்லை எனவும் அது ஒரு தனியார் அறக்கட்டளை என்றும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்தது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: PM Cares, PM Narendra Modi, Ratan TATA