9 மாத நாய்க்குட்டிக்காக உருக்கமான வேண்டுகோள் விடுத்த ரத்தன் டாடா..!

ரத்தன் டாடா

'விலங்குகளுக்கு ஏற்படும் பல கஷ்டங்களுள் மிகவும் கொடுமையானது, குடும்பம் இன்றி தனித்து விடப்படுவதுதான். '

 • News18
 • Last Updated :
 • Share this:
  கைவிடப்பட்ட 9 மாத நாய்க்குட்டியைத் தத்தெடுக்க விரும்புவோர் தொடர்புகொள்ளுங்கள் எனத் தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார் ரத்தன் டாடா.

  மைரா எனப் பெயரிடப்பட்ட அந்த 9 மாத லேப்ரடார் நாய்க்குட்டிக்காக ஒரு குடும்பம் வேண்டும் எனத் தேடி வருகிறார் டாடா. நாய்கள் வளர்ப்பதில் பிரியம் உள்ள டாடா, இரண்டு செல்ல நாய்களைத் தனது வீட்டில் வளர்த்து வருகிறார். தற்போது மற்றொரு நாய்க்குட்டிக்காக ரத்தன் டாடா ஒரு குடும்பம் தேடி இன்ஸ்டா பதிவு வெளியிட்டுள்ளார்.

  அதில் டாடா, “விலங்குகளுக்கு ஏற்படும் பல கஷ்டங்களுள் மிகவும் கொடுமையானது, குடும்பம் இன்றி தனித்து விடப்படுவதுதான். அந்தக் குட்டிகள் தனிமையில் விடப்படும் போது எப்படி உணர்ந்திருக்கும், இன்று வீடிருந்து நாளை வீடு இல்லாத நிலை. கைவிடப்பட்ட 9 மாத மைராவுக்கு ஒரு குடும்பத்தை ஏற்படுத்தித் தர உங்களால் முடிந்தால் உதவுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
  தத்தெடுக்க முன் வருபவர்கள் https://docs.google.com/forms/d/e/1FAIpQLSf_yHCVfLHAMG9DzYBqD5gtGsD1T8EyOmcnCqgB9fc9FgIRaA/viewform

  என்ற இணையதளப் பக்கத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அனுப்புங்கள் என்றும் கோரிக்கை வைத்துள்ளார் டாடா.

  மேலும் பார்க்க: உலகின் பெரிய மலர் கார்பெட்... துபாய் கின்னஸ் சாதனைக்காக பறந்த பெங்களூரு மலர்கள்!
  Published by:Rahini M
  First published: