முகப்பு /செய்தி /இந்தியா / கேரளாவில் இப்படி ஒரு திருடனா? நகைக்கடையில் புகுந்து நெக்லஸை லாவகமாக தூக்கிச்சென்ற எலி..!

கேரளாவில் இப்படி ஒரு திருடனா? நகைக்கடையில் புகுந்து நெக்லஸை லாவகமாக தூக்கிச்சென்ற எலி..!

நகைக்கடையில் நெக்லஸை எடுத்து செல்லும் எலி

நகைக்கடையில் நெக்லஸை எடுத்து செல்லும் எலி

Rat Lift Necklace : கேரளாவில் உள்ள நகைக்கடையில் நள்ளிரவு புகுந்த எலி அங்கிருந்த நெக்லஸை லாபகமாக தூக்கி செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Kerala, India

கேரளாவில் நகைக்கடையில் புகுந்து நெக்லஸை எலி திருடிச்சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

கேரளா மாநிலம் காசர்கோடு பகுதியில் பிரபல நகைக்கடை இயங்கி வருகிறது. அந்த கடையில் விற்பனைக்காக காட்சி பெட்டிகளில் ஏராளமான நெக்லஸ்கள் வைக்கப்பட்டிருந்தது. இதனிடையே அந்த காட்சி பெட்டியில இருந்த ஒரு நெக்லஸ் காணாமல் போயிருந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த நகைக்கடை ஊழியர்கள் கடையின் பல இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனாலும் அந்த நெக்லஸ் எங்கும் கிடைக்கவில்லை.

இதனால் கடையில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த பதிவில் நள்ளிரவு கடையின் சீலிங் வழியாக உள்ளே புகுந்த எலி ஒன்று அந்த நெக்லெஸை லாவகமாக தனது வாயால் தூக்கி செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது. இதையடுத்து, என்ன செய்வதென்று தெரியாமல் நகைக்கடை ஊழியர்கள் குழப்படைந்தனர். இதையடுத்து, நகைக்கடை உரிமையாளரிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் தற்போது காவல்துறையிடம் புகாரளிக்கலாமா என குழம்பி வருகின்றனர்.

இந்நிலையில், நகைக்கடையில் நகையை திருடிய எலி தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் “திருடனை கவனமாக பாருங்கள்” என்ற வாசகத்துடன் எலி அந்த நெக்லெஸை தூக்கி செல்லும் சிசிடிவி காட்சிகள் பதிவாகியிருந்தது. நகைக்கடையில் திருடிய புதுவித திருடனால் கேரள நகைக்கடை உரிமையாளர் பீதியடைந்துள்ளனர்.

First published:

Tags: Crime News, Kerala