”யாருடைய வெற்றியாகவோ, தோல்வியாகவோ பார்க்கக் கூடாது...” அயோத்தி தீர்ப்பு குறித்து பிரதமர் மோடி

news18
Updated: November 9, 2019, 1:27 PM IST
”யாருடைய வெற்றியாகவோ, தோல்வியாகவோ பார்க்கக் கூடாது...” அயோத்தி தீர்ப்பு குறித்து பிரதமர் மோடி
மோடி
news18
Updated: November 9, 2019, 1:27 PM IST
அயோத்தி நில விவகார வழக்கில் தீர்ப்பு இன்று வெளியாகியுள்ள நிலையில், நாட்டு மக்கள் அமைதியையும், நல்லிணக்கத்தையும் நிலை நாட்ட வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

அயோத்தி நில விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் இன்று தனது தீர்ப்பை வழங்கியது. சர்ச்சைக்குரிய இடம் இந்துக்களுக்கே சொந்தம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும், இஸ்லாமியர்களுக்கு வேறு இடம் ஒதுக்க உத்தரவிடப்பட்டது.

தீர்ப்பை பாஜக தலைவர்கள் அனைவரும் வரவேற்றுள்ளனர். தீர்ப்பு பற்றி ட்வீட் செய்துள்ள பிரதமர், ராம பக்தியோ அல்லது ரஹீம் பக்தியோ இது தேச பக்தியை வலுப்படுத்த வேண்டிய நேரம் இது என்று கூறியுள்ளார்.


மேலும், தீர்ப்பை யாருடைய வெற்றியாகவோ, தோல்வியாகவோ பார்க்கக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார். நாட்டு மக்கள் அமைதியையும் நல்லிணக்கத்தையும் நிலை நாட்ட வேண்டும் என்றும் பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.Also See....
First published: November 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...