Home /News /national /

பைக் ரேஸ் போறீங்களா? உங்களுக்கு 6 மாதம் சிறை கன்பார்ம் - மும்பை போலீஸ் அதிரடி!

பைக் ரேஸ் போறீங்களா? உங்களுக்கு 6 மாதம் சிறை கன்பார்ம் - மும்பை போலீஸ் அதிரடி!

படம்: PTI

படம்: PTI

மும்பை போக்குவரத்து காவல்துறையின் அதிரடி நடவடிக்கைகள் குறித்து பேசிய மும்பை போக்குவரத்து இணை ஆணையர் யாஷவி யாதவ் (Yashasvi Yadav), போக்குவரத்து விதிகளை மீறுபவர்களால் விபத்துக்கள் ஏற்பட்டு அதிகளவு உயிரிழப்புகள் ஏற்படுவதாக தெரிவித்தார்.

மேலும் படிக்கவும் ...
  • News18
  • 2 minute read
  • Last Updated :
பைக் ரேஸ், அதிவேகமாக மற்றும் தவறான வழிகளில் செல்லுதல் உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை மீறுவோரை சிசிடிவி மூலம் அடையாளம் கண்டு, தண்டிக்கும் நடைமுறையை மும்பை காவல்துறை தொடங்கியுள்ளது.

போக்குவரத்து விதிகளை பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் சாலைகளில் பயணிப்பவர்களால் அதிகளவு சாலை விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதனை கருத்தில் கொண்டு மும்பை போக்குவரத்து காவல்துறை அதிரடி நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. அதாவது, சாலைகளில் வேகமாக செல்லுதல், ரேஸில் ஈடுபடுதல், தவறான பாதையில் செல்லுதல் உள்ளிட்ட போக்குரவத்து விதிகளை மீறுவோரை சிசிடிவி-க்கள் மூலம் அடையாளம் கண்டுபிடிக்கும் பணியை தொடங்கியுள்ளது. 

அதில் அடையாளம் காணப்படும் நபர்களின் வீட்டிற்கு, அப்பகுதியில் இருக்கும் காவல்துறையின் உதவியுடன் செல்லும் போக்குவரத்து காவல்துறை, சாலை விதிகளை மீறியதற்கான வழக்கை பதிவு செய்து அபராதம் அல்லது 6 மாதம் சிறை அல்லது அபராதத்துடன் கூடிய 6 மாத சிறை தண்டனையை விதித்து வருகிறது. புத்தாண்டில் இருந்து மும்பை போக்குவரத்து காவல்துறை இந்த நடைமுறையை தொடங்கியுள்ளது. அதற்காக, மும்பை நகரப் பகுதிகளில் பொருத்தியிருக்கும் அனைத்து சிசிடிவிக்களின் பதிவுகளையும் தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. 

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் போக்குவரத்து விதிகளை மீறியவர்களின் தகவல்களை சேகரித்திருக்கும் மும்பை காவல்துறை, அடையாளம் காணப்பட்ட நபர்களின் வீட்டிற்கு சென்று தண்டனை விதித்து வருகிறது. தற்போது வரை போக்குவரத்து விதிகளை மீறிய 155 வாகன ஓட்டிகள் மீது IPC சட்டப்பிரிவு 279 -ன் படி முதல் தகவல் அறிக்கை பதிவு (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது. அபராதம் செலுத்த மறுக்கும் வாகன ஓட்டிகளுக்கு சிறை தண்டனையும் விதிக்கப்படுகிறது. ஜனவரி 4 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையில் 121 இருசக்கர வாகன ஓட்டிகள், 23 நான்கு சக்கர வாகன ஓட்டிகள், 11 மூன்று சக்கர வாகன ஓட்டிகள் மீது மும்பை காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. 

தொடர்ந்து அடையாளம் காணப்படும் விதிமீறலில் ஈடுபட்டோர் வீடுகளுக்கு நோட்டீஸ்களையும் காவல்துறை அனுப்பி வருகிறது. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் முறையாக அபராதம் செலுத்தாத 4200 வாகன ஓட்டிகளின் தகவல்களை சேகரித்துள்ள மும்பை போக்குவரத்து காவல்துறை, அவர்களின் ஓட்டுநர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்யக்கோரி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு (RTO) பரிந்துரை செய்துள்ளது. விரைவில் அந்த வாகன ஓட்டிகளுக்கு இதுதொடர்பாக விளக்கம் கேட்டு மும்பை ஆர்.டி.ஓ அலுவலகம் நோட்டீஸ் அனுப்ப உள்ளது. 

Also read... மும்பையில் 'இன்ஸ்டாகிராம் தோழி' வீட்டில் ரூ.14 லட்சம் கைவரிசை - தோழனை கைது செய்த காவல்துறை!

மும்பை போக்குவரத்து காவல்துறையின் அதிரடி நடவடிக்கைகள் குறித்து பேசிய மும்பை போக்குவரத்து இணை ஆணையர் யாஷவி யாதவ் (Yashasvi Yadav), போக்குவரத்து விதிகளை மீறுபவர்களால் விபத்துக்கள் ஏற்பட்டு அதிகளவு உயிரிழப்புகள் ஏற்படுவதாக தெரிவித்தார். இதனால், போக்குவரத்து விதிகளை ஒருபோதும் மீறக்கூடாது என்பதை எச்சரிக்கும் விதமாக, விதிகளை மீறுவோர் மீது  கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார். 

இதற்காக, சிசிடிவியில் பதிவாகும் வாகன எண்ணைக் கொண்டு, வாகன உரிமையாளரின் வீட்டுக்கே சென்று வழக்குப்பதிவு செய்து தண்டனை வழங்கப்பட்டு வருவதாகவும் யாஷவி யாதவ் தெரிவித்தார். மும்பை போலீஸ் அறிக்கையின்படி, சாலை விதிகளை மீறிய 78 விழுக்காட்டினர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சியவர்களும் விரைவில் அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என கூறியுள்ளது. IPC பிரிவு 279ன்படி 1000 ரூபாய் அபராதம் அல்லது 6 மாதம் சிறை தண்டனையை ஒருவருக்கு விதிக்கமுடியும்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Mumbai Police

அடுத்த செய்தி