• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • குளத்தில் மீனவர்களின் வலையில் சிக்கிய அரியவகை ‘மஞ்சள்’ஆமை - மஞ்சள் நிறத்துக்கு என்ன காரணம்?

குளத்தில் மீனவர்களின் வலையில் சிக்கிய அரியவகை ‘மஞ்சள்’ஆமை - மஞ்சள் நிறத்துக்கு என்ன காரணம்?

Rare Yellow turtle

Rare Yellow turtle

ஆமைகள் மஞ்சள் நிறத்தில் இருப்பதற்கு ஜெனிடிக்ஸ் மாறுபாடு காரணம். மஞ்சள் ஆமைகள் மிகவும் அரிதானவை.

  • Share this:
மேற்கு வங்க மாநிலத்தின் கிராமத்தில் இருந்த குளம் ஒன்றில் அரியவகை மஞ்சள் ஆமை இருந்தது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

மின்னாப்பூர் மாவட்டத்தின் கிழக்குப் பகுதியில் கெஜூரி என்ற கிராமம் அமைந்துள்ளது. அந்த கிராமத்தைச் சேர்ந்த சுபிமல் பெரா என்பவர் அருகில் இருந்த குளத்தில் மீன்பிடித்துக் கொண்டு இருந்துள்ளார்.  அப்போது, அவருடைய வலையில் அரிய வகை ஆமையினமான ’மஞ்சள் ஆமை’ சிக்கியுள்ளது.

மஞ்சள் கலரில் ஆமை இருந்ததைப் பார்த்து வியப்படைந்த அவர், தல்பதி காட் கடலோர காவல்நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளார். விரைந்து வந்த கடலோர காவல்படையினர் அரிய வகை ஆமையைப் பார்த்து வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து அங்கு வந்த அதிகாரிகள் அரிய வகை ஆமையை பத்திரமாக எடுத்துச் சென்றனர். ஆமையைப் பார்க்க உள்ளூரைச் சேர்ந்த ஏராளமான மக்கள் அங்கு கூடினர்.

Also Read:  டேக்ஸி ஓட்டுநர் மீது இளம்பெண் தாக்குதல்.. தடுக்க வந்தவருக்கும் அடி..

அரியவகை மஞ்சள் ஆமை சிக்குவது இது முதல் முறை அல்ல. இதேபோன்ற ஒரு ஆமை கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஒடிசா மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. பாலசோர் பகுதியில் இருந்த ஆமையை கண்டுபிடித்த அப்பகுதி மக்கள், கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு வந்த அதிகாரிகள் ஆமையை எடுத்துச் சென்றனர். மேற்கு வங்க மாநிலத்திலேயே மஞ்சள் ஆமை இதற்கு முன்பு பிடிபட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பர்த்வான் மாவட்டத்தில் இதே இனத்தைச் சேர்ந்த ஆமை கண்டுபிடிக்கப்பட்டது. இதனை வனத்துறை அதிகாரியான திபாஷிஷ் சர்மா (Debashish Sharma) தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அப்போது மஞ்சள் ஆமை குறித்து விளக்கம் கொடுத்த அவர், ஆமைகள் மஞ்சள் நிறத்தில் இருப்பதற்கு ஜெனிடிக்ஸ் மாறுபாடு காரணம் எனத் தெரிவித்தார். வேறுசில வனத்துறை அதிகாரிகள் பேசும்போது, மஞ்சள் ஆமைகள் மிகவும் அரிதானவை எனக் கூறினர்.

Also Read: மார்பை தொட்ட இளைஞருக்கு, இளம் பெண் கொடுத்த ஷாக்!

தமிழ்நாட்டிலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அரியவகை ஆமை ஒன்று சிக்கியது. தருமபுரி மாவட்டம், மொரப்பூர் பகுதியில் விளை நிலத்தில் இருந்த நட்சத்திர வகை ஆமையைப் பார்த்த விவசாயி ஒருவர், அது குறித்து மொரப்பூர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார். இதனடிப்படையில் அங்கு வந்த வனத்துறை அதிகாரி சிவக்குமார், அரியவகை நட்சத்திர ஆமையைப் பிடித்து அரூர் பகுதியில் உள்ள காப்புக்காட்டில் பத்திரமாக விடுவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வெளிநாடுகளில் நட்சத்திர ஆமைகளை மூலிகை உணவாக சாப்பிட்டு வருவதாக கூறப்படும் நிலையில், காப்புக்காடுகளில் இருக்கும் ஆமைகளை சிலர் இறைச்சிக்காக பிடித்து செல்வதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் விவசாயி, தன் விளைநிலத்தில் இருந்த ஆமை குறித்து வனத்துறைக்கு தகவல் கொடுத்து, அதனை பாதுகாக்க எடுத்த முயற்சிக்காக வனத்துறை அதிகாரி சிவக்குமார் அவரைப் பாராட்டினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: