ஹோம் /நியூஸ் /இந்தியா /

கேரளாவில் 142 ஆண்டுகளுக்குப் பின் தென்பட்ட அரியவகை பாம்பு..! - ஆராய்ச்சியாளர்கள் மகிழ்ச்சி

கேரளாவில் 142 ஆண்டுகளுக்குப் பின் தென்பட்ட அரியவகை பாம்பு..! - ஆராய்ச்சியாளர்கள் மகிழ்ச்சி

அரியவகை பாம்பு வயநாட்டில் கண்டுபிடிப்பு

அரியவகை பாம்பு வயநாட்டில் கண்டுபிடிப்பு

தங்க கவச வாலன் என்ற அரியவகை பாம்பு 142 ஆண்டுக்குப் பின் மீண்டும் மண்ணுக்குள் இருந்து வெளியே வந்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Kerala, India

  கேரளா மாநிலம் வயநாட்டில் 142 ஆண்டுகளுக்குப் பின் அரியவகை பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வயநாட்டில் உள்ள சுல்தான்பத்தேரி என்ற பகுதியில் செம்பராமலை என்ற மலைப் பிரதேசம் உள்ளது. இது கடல் மட்டத்தில் இருந்து 1,400 அடி உயரத்தில் உள்ளது. அங்கு தொழிலாளர்கள் சிலர் வழக்கம் போல வேலை பார்த்துக்கொண்டிருந்தனர்.

  வேலை நிமித்தமாக வனப்பகுதியில் இருந்த மண்ணை அவர்கள் தோண்டிக்கொண்டிருந்த போது, மண்ணுக்குள் இருந்து பாம்பு ஒன்று திடீரென வெளியே வந்தது. இந்த பாம்பு பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்ததால், இது குறித்து வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து பார்வையிட்டனர். ஆராய்ச்சியாளர்களின் சோதனையில் இந்த பாம்பு தங்க கவச வாலன் என்ற அரியவகை பாம்பு என்பது தெரியவந்தது. சுமார் 142 ஆண்டுகளுக்குப் பின் இந்த பாம்பு மண்ணில் இருந்து வெளியே வந்துள்ளது. முதல்முதலாக 1880ஆம் ஆண்டில் இந்த பாம்பு வகையை கர்னல் ரிச்சர்டு ஹென்ரி பெட்டோம் என்பவர் கண்டறிந்தார்.

  இதையும் படிங்க: கோபி மஞ்சூரியன் சாப்பிடுவதில் தகராறு.. பாட்டியை கொலை செய்த பேரன்.. 6 ஆண்டுகளுக்கு பின் சிக்கியது எப்படி?

  செம்பரா மலை பகுதியில் 142 ஆண்டுகளுக்கு முன்பு கண்டறியப்பட்ட இந்த பாம்பு தற்போது மீண்டும் வெளியே வந்துள்ளதால் வனத்துறையினர் மற்றும் உயிரியல் ஆராய்ச்சியாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த அரிய வகை பாம்புகள் மேலும் செம்பாரா மலையில் உள்ளதா, இதேபோல் மேலும் பல உயிரினங்கள் தென்படுகின்றனவா என்ற ஆராய்ச்சியில் இந்திய அறிவியல் நிறுவனத்தின் ஆய்வு குழு தற்போது ஈடுபட்டு வருகிறது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Hill Stations, Snake, Wayanad