Home /News /national /

பேரன் முன்னிலையில் பாலியல் வன்புணர்வு: அதிர வைக்கும் திரிணாமுல் காங்கிரஸார் மீதான புகார்கள்!

பேரன் முன்னிலையில் பாலியல் வன்புணர்வு: அதிர வைக்கும் திரிணாமுல் காங்கிரஸார் மீதான புகார்கள்!

கூட்டு பாலியல் வன்புணர்வு

கூட்டு பாலியல் வன்புணர்வு

பட்டியலினத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், மே 9ம் தேதியன்று தன்னை திரிணாமுல் காங்கிரஸ்காரர்கள் காட்டுப்பகுதிக்கு தூக்கிச் சென்று கூட்டு பாலியல் வன்புணர்வு செய்ததாகவும், அங்கேயே சாகட்டும் என தவிக்கவிட்டு சென்றதாகவும் கூறினார்.

மேலும் படிக்கவும் ...
கடந்த ஏப்ரல் மாதத்தில் மேற்குவங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அதே போல மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருந்த போதே மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி முகம் கண்டது. 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அக்கட்சி வெற்றி பெற்று தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியை கைப்பற்றியது. அதே நேரத்தில் மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்றும் முனைப்பில் இருந்த பாஜக 70க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று எதிர்கட்சி அந்தஸ்தை பெற்றது.

சட்டமன்ற தேர்தலில் பாஜகவுக்கும், திரிணாமுல் காங்கிரஸுக்கும் கடுமையான போட்டி ஏற்பட்டதால், வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. பாஜகவுக்காக பிரச்சாரம் செய்தவர்களை தேடிப் பிடித்து திரிணாமுல் காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் கொலை செய்வது, பாலியல் வன்புணர்வில் ஈடுபடுவது, வீடுகளை கொள்ளையடிப்பது, அடித்து துன்புறுத்துவது என அரங்கேற்றப்பட்டதாக புகார் எழுந்தது. இது குறித்த பல வீடியோக்கள் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்தது. எனினும் மாநில காவல்துறை வன்முறை சம்பவங்களை தடுத்து நிறுத்தாமல் கைகட்டி வேடிக்கை பார்த்ததாகவும், திரிணாமுல் காங்கிரஸாரை தடுக்கவில்லை எனவும் கூறப்பட்டது. தேர்தலுக்கு பிந்தைய வன்முறை சம்பவங்களால் 16 பேர் உயிரிழந்ததாக மம்தா தெரிவித்த நிலையில் நூற்றுக்கணக்கானோர் மேற்குவங்கத்தை விட்டு தப்பித்தோம் பிழைத்தோம் என அண்டை மாநிலமான பீகாரில் தஞ்சம் அடைந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

Also Read:   உயர் அதிகாரிகளுக்காக 32 சொகுசுக் கார்கள் வாங்கிய தெலங்கானா அர்சு - சர்ச்சையில் சிக்கிய சந்திரசேகர் ராவ்!

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் திரிணாமுல் காங்கிரஸாரின் வன்முறை வெறியாட்டம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி பாதிக்கப்பட்ட பல பெண்கள் முறையிட்டுள்ளனர். இந்த மனுக்களில் இடம்பெற்றுள்ள தகவல்கள் அதிர்ச்சி ரகமாக அமைந்துள்ளது.

புர்பா மெதின்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 60 வயது பெண்மணி ஒருவர்
தன்னுடைய 6 வயது பேரன் முன்னிலையில் திரிணாமுல் காங்கிரஸை சேர்ந்தவர்களால் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாக கூறியுள்ளார். மே 4ம் தேதி 5ம் தேதிக்கு இடைப்பட்ட இரவில் இச்சம்பவம் நடைபெற்றதாகவும் பின்னர் அந்த கும்பல் அவர்களுடைய வீட்டை கொள்ளையடித்ததாகவும் கூறுகிறார்.

தேர்தல் பழிவாங்குதல் நடவடிக்கையாக பாலியல் வன்புணர்வை அவர்கள் கருவியாக பயன்படுத்தியதாகவும், இதில் முக்கியமாக போலீசார் வாய் மூடி மவுனியாக சத்தமில்லாமல் அந்த வன்முறை வெறியாட்டத்துக்கு துணை போனதாகவும் அவர் கூறுகின்றார்.

Also Read:  இனி காங்கிரஸ் கட்சி தனித்தே தேர்தல்களை சந்திக்கும்: மகாராஷ்டிரா ஆளும் கூட்டணியில் விரிசல்?

மற்றொரு பெண் உச்சநீதிமன்றத்தில் அளித்துள்ள மனுவில் பாஜகவுக்காக பிரச்சாரம் செய்த தனது கணவரை தேடிப் பிடித்து மே 14ம் தேதியன்று என் கண் முன்னர் வைத்தே கோடாரியால் வெட்டிப் படுகொலை செய்தனர். அந்தக் கொலையை என்னை பார்க்கவும் வைத்தனர். பின்னர் என் நகைகளை கொள்ளையடித்து விட்டு என்னை பாலியல் வன்புணர்வு செய்தனர் என கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதே போல பட்டியலினத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர், மே 9ம் தேதியன்று தன்னை திரிணாமுல் காங்கிரஸ்காரர்கள் காட்டுப்பகுதிக்கு தூக்கிச் சென்று கூட்டு பாலியல் வன்புணர்வு செய்ததாகவும், அங்கேயே சாகட்டும் என தவிக்கவிட்டு சென்றதாகவும் கூறினார். பின்னர் மறுநாள் திரிணாமுல் தலைவர் பகதூர் என்பவர் வீட்டுக்கு வந்து நடந்தது குறித்து யாரிடமும் வெளியே சொல்லக்கூடாது என மிரட்டியதாகவும் கூறினார்.

 
Published by:Arun
First published:

Tags: BJP, Crime | குற்றச் செய்திகள், Gang rape, Mamata banerjee, Rape, Supreme court, TMC, Violence

அடுத்த செய்தி