• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • தந்தை யார் என மகன் கேட்டதால் 27 ஆண்டுகளுக்கு முன்னர் பாலியல் வன்புணர்வு செய்த இருவர் மீது புகார் அளித்த பெண்!

தந்தை யார் என மகன் கேட்டதால் 27 ஆண்டுகளுக்கு முன்னர் பாலியல் வன்புணர்வு செய்த இருவர் மீது புகார் அளித்த பெண்!

பாலியல் வன்புணர்வு

பாலியல் வன்புணர்வு

10 ஆண்டுகளுக்கு பின்னர் பெண்ணின் கணவருக்கு, மனைவிபாலியல் வன்புணர்வுக்கு ஆளான பெண் என தெரியவரவே அவர் விவாகரத்து பெற்று சென்று விட்டார்.

  • Share this:
தனது தந்தை யார் என மகன் கேட்டதால் தன்னை 27 ஆண்டுகளுக்கு முன்னதாக பாலியல் வன்புணர்வு செய்த இருவர் மீது பெண் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மகன் கேட்ட கேள்வியால், 27 ஆண்டுகளுக்கு முன்னர் தன்னுடைய 12வது வயதில் இருவர் தன்னை பல முறை பாலியல் வன்புணர்வு செய்ததாக தாய் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.

உத்தரப்பிரதேசத்தின் ஷாஜகான்பூர் அருகே உதம்பூர் எனும் கிராமத்தைச் சேர்ந்த 39 வயது பெண் ஒருவர் 27 ஆண்டுகளுக்கு முன்னர் இருவரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டதாக புகார் தெரிவித்தார். 27 ஆண்டுகளுக்கு முன்னர் தனது சகோதரி மற்றும் சகோதரியின் கணவருடன் ஷாஜகான்பூரில் வசித்து வந்த போது அதே பகுதியைச் சேர்ந்த நகி ஹசன் என்பவர் யாரும் வீட்டில் இல்லாத போது தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக அப்பெண் தெரிவித்துள்ளார். இதனையடுத்து நகி ஹசனின் இளைய சகோதரரான குட்டுவும் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக தெரிவித்தார். அந்த இருவராலும் தான் பல முறை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக நேர்ந்ததாகவும் அவர் கூறியுள்ளார். அப்போது தனக்கு 12 வயது தான் இருந்தது எனவும் அவர் குறிப்பிட்டார்.

பாலியல் வன்புணர்வு


இதன் காரணமாக 13 வயதில் அவர் கர்ப்பம் தரித்தார், 1994-ல் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அக்குழந்தையை பெண்ணின் கிராமத்தில் அவருடைய உறவினரிடம் கொடுத்துவிட்டனர். இதன் பிறகு சகோதரியின் கணவருக்கு பணி மாறுதல் கிடைக்கவே அவர்கள் அனைவரும் ஷாஜகான்பூரில் இருந்து காசிபூருக்கு சென்றனர். பின்னர் அப்பெண்ணை காசிபூரைச் சேர்ந்த ஒருவருக்கு மணம் முடித்து கொடுத்துள்ளனர் சகோதரியின் குடும்பத்தினர்.

இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு பின்னர் அவருடைய கணவருக்கு இவர் பாலியல் வன்புணர்வுக்கு ஆளான பெண் என தெரியவரவே அவர் விவாகரத்து பெற்று சென்று விட்டார். இதனையடுத்து மீண்டும் அப்பெண் ஷாஜகான்பூருக்கு திரும்பியுள்ளார்.

இதற்கிடையே நன்கு வளர்ந்துவிட்ட அப்பெண்ணின் மகன், தன்னுடைய தாய் - தந்தை குறித்து அவனை வளர்த்தவர்களிடம் கேட்கவே அவர்களும் அவனுடைய தாயின் இருப்பிடத்தை தெரிவித்தனர். தன் தாயைத் தேடி வந்த அவருடைய மகன் தன் தந்தை யார் என தாயிடம் கேட்டுள்ளார்.

இந்த கேள்வியின் வெளிப்பாடாக காவல்நிலையம் சென்ற அப்பெண் என்னை 27 ஆண்டுகளுக்கு முன்னர் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கிய இருவர் மீதும் புகார் தெரிவித்தார். அவர்கள் புகாரை ஏற்க மறுத்த நிலையில் நீதிமன்றத்தில் முறையிட்டு பின்னர் பெண்ணின் புகாரை பதிவு செய்ய வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டிருக்கின்றனர்.

இந்த புகார் தொடர்பாக பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சஞ்சய் குமார், இந்த புகார் மீது உரிய முறையில் விசாரிக்கப்படும் எனவும் அப்பெண்ணின் மகனுக்கு டி.என்.ஏ பரிசோதனை நடத்தப்பட இருப்பதாகவும் தெரிவித்தார்.

27 ஆண்டுகளுக்கு முன் அப்பெண்ணின் வாழ்க்கையில் நடந்த விபரீதத்தால் அப்பெண்ணின் வாழ்க்கையே திசைமாறிய சம்பவம் குறித்து சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: