ஷியா முஸ்லிம் தலைவர் மீது பாலியல் பலாத்கார வழக்குப் பதிய லக்னோ நீதிமன்றம் உத்தரவு

வாசிம் ரிஸ்வி.

உத்தரப்பிரதேசத்தின் ஷியா பிரிவு முஸ்லிம் தலைவரான வாசிம் ரிஸ்வீ மீது பாலியல் பலாத்காரப் புகார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 • Share this:
  உத்தரப்பிரதேசத்தின் ஷியா பிரிவு முஸ்லிம் தலைவரான வாசிம் ரிஸ்வீ மீது பாலியல் பலாத்காரப் புகார் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

  இவரிடம் ஓட்டுநராக இருந்தவரின் மனைவியின் புகாரை விசாரித்த லக்னோ நீதிமன்றம் இதற்காக உத்தரவிட்டுள்ளது. முன்னாள் ஓட்டுநரின் மனைவி தன் புகாரில் கணவன் இல்லாத நேரத்தில் தன்னை பாலியல் ரீதியாக மிரட்டியதாகவும் ஆபாசப் புகைப்படம் எடுத்து வலைத்தளத்தில் வெளியிடுவே என்று மிரட்டியதாகவும் இந்தப் பெண் புகார் அளித்துள்ளார்.

  இவரது டார்ச்சர் பொறுக்க முடியாமல் கடைசியில் தன் கணவனிடம் ரிஸ்வி பற்றி புகார் கூறியுள்ளார். தன் இதைத் தட்டிக் கேட்ட போது ரிஸ்வி தன் கணவரையும் அடித்து உதைத்தார் என்று தன் புகாரில் அவர் தெரிவித்துள்ளார்.

  ரிஸ்வி இந்தப் புகார் குறித்து கூறும்போது, “நான் போகும் வரும் இடத்தையெல்லாம் குறித்து வைத்துக் கொண்டு அதை வெளியே கசியவிட்டார் அந்த டிரைவர், இதனால் அவரை வேலையை விட்டு அனுப்பினேன். அவரும் வேறு வேலையில் சேர்ந்து விட்டார், இப்போது 10 நாட்களுக்குப் பிறகு போலீஸ் ஸ்டேஷன் சென்று என்னைப் பற்றி புகார் தெரிவித்துள்ளார். போலீசார் விசாரித்து புகாரில் ஆதாரமில்லை என்று எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய மறுத்தனர்” என்றார். இந்த வழக்கில்தான் லக்னோ நீதிமன்றம் ரிஸ்வி மீது வழக்குப் பதிய உத்தரவிட்டுள்ளது.

  உத்தரப்பிரதேசம் ஷியா முஸ்லிம் மத்திய வஃக்பு வாரியத்தின் முன்னாள் தலைவர் வாசிம் ரிஸ்வீ. தற்போது அவ்வாரியத்தின் உறுப்பினராகவும் உள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  தனது இந்துத்துவா ஆதரவு நிலைப்பாடு காரணமாக ரிஸ்வீ தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அயோத்தியின் ராமர் கோயில் வழக்கில் இந்துக்களுக்கு ஆதரவாகவும் ரிஸ்வீ பேசியிருந்தார்.

  கடைசியாக மார்ச்சில் இவர் முஸ்லிம்களின் புனித நூலான குர்ஆனின் சில வாசகங்களை நீக்க வேண்டும் எனவும், அவை தீவிரவாதத்தை வளர்ப்பதாகவும் கூறி உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.

  இம்மனுவை கடந்த ஏப்ரலில் தள்ளுபடி செய்த நீதிமன்றம் இதற்காக ரிஜ்வீக்கு ரூ.50,000 அபராதமும் விதித்தது. இதையடுத்து, வாசிம் ரிஸ்வி புதிதாக பாலியியல் பலாத்கார வழக்கில் சிக்கியுள்ளார்.
  Published by:Muthukumar
  First published: