மருமகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக முன்னாள் பா.ஜ.க எம்.எல்.ஏ மீது வழக்கு!

அப்போது, நள்ளிரவில் 1.30 மணி அளவில் எனது மாமனார் கதவைத் தட்டி என்னிடம் பேசவேண்டும் என்று கூறினார். நான் கதவைத் திறந்தேன். உள்ளே வந்த அவர் தவறான முறையில் என் மீது கைவைத்தார்.

news18
Updated: August 11, 2019, 5:43 PM IST
மருமகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக முன்னாள் பா.ஜ.க எம்.எல்.ஏ மீது வழக்கு!
மாதிரிப் படம்
news18
Updated: August 11, 2019, 5:43 PM IST
முன்னாள் பா.ஜ.க எம்.எல்.ஏ மனோஜ் சோகீன் அவரது மருமகளை பாலியல் வன்கொடுமை செய்தார் என்று வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

டெல்லி மாநிலம் நாங்லோய் தொகுயிலிருந்து இரண்டு பா.ஜ.க சார்பில் எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மனோஜ் சோகீன். அவர் மீது, கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவரது மருமகள் காவல்நிலையத்தில் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரில், ‘கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக ஹோட்டலுக்குச் சென்றிருந்தோம். அங்கே எங்களுடைய உறவினர்கள் பலரும் வந்திருந்தனர். இரவில் எனது கணவர் அவரது நண்பர்களுடன் வெளியே சென்றார். நான், அறைக்குச் சென்று உறங்கச் சென்றேன்.

அப்போது, நள்ளிரவில் 1.30 மணி அளவில் எனது மாமனார் கதவைத் தட்டி என்னிடம் பேசவேண்டும் என்று கூறினார். நான் கதவைத் திறந்தேன். உள்ளே வந்த அவர் தவறான முறையில் என் மீது கைவைத்தார். அப்போது அவர் குடித்திருந்தார். நான் அவரைத் தள்ளிவிட்டு உறங்கச் செல்ல அறிவுறுத்தினேன். அவர் என்னை அடித்து கீழே தள்ளி துப்பாக்கியைக் கொண்டு என்னை மிரட்டினார்.

எனது தம்பியை கொலை செய்துவிடுவேன் என்று என்னை மிரட்டினார். பின்னர், வலுக்கட்டாயமாக என்னை பாலியல் வன்கொடுமை செய்தார்’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு தொடர்பாக, மனோஜ் சோகீன் மீது சட்டப் பிரிவு 376, 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Also see:

First published: August 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...