அயோத்தி தீர்ப்பு...! உ.பி தலைமைச் செயலாளர் & டிஜிபியுடன் ரஞ்சன் கோகாய் ஆலோசனை

கோப்புப் படம்

 • News18
 • Last Updated :
 • Share this:
  அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், உத்தரபிரதேச மாநிலம் முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

  அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்திற்கு உரிமை கோரும் வழக்கில் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அடுத்த வாரத்திற்குள் தீர்ப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

  உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், லக்னோவில் இருந்து காணொலி மூலமாக மாவட்ட வாரியாக அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

  மத்திய பிரதேசம் இந்தூர் நகரில் சட்டம் அமைதியைக் காக்க காவல்துறையினர் வெண்ணிற கொடியுடன் அணிவகுப்பு நடத்தினர். 4,000 பாதுகாப்புப் படையினரை மத்திய அரசு அயோத்திக்கு அனுப்பி வைத்துள்ளது.

  பதற்றம் நிறைந்த இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, எட்டு தற்காலிக சிறைகளை அமைத்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

  மாநிலங்களில் சட்டம் ஒழுங்கை கண்காணிக்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், 1990-ம் ஆண்டு முதல் கரசேவகபுரத்தில் நடைபெற்று வந்த ராமர் கோவிலுக்கான சிற்பங்கள் வடிவமைக்கும் பணியும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

  Also see...

  Published by:Vinothini Aandisamy
  First published: