உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் இன்று பதவியேற்கிறார். அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்துவைக்க உள்ளார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ரா நேற்று ஓய்வுபெற்றார். இதையடுத்து, அவருக்கு அடுத்த நிலையில் இருந்த ரஞ்சன் கோகாயை புதிய தலைமை நீதிபதியாக குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார். இதன்படி, புதிய தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் இன்று பதவியேற்க உள்ளார்.
அவருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்துவைக்க உள்ளார். 46-வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ள கோகாய், அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர். அசாம் மாநிலத்திலிருந்து தலைமை நீதிபதி பொறுப்பை ஏற்கும் முதல் நபர் என்ற பெருமையை அவர் பெறுகிறார்.
அடுத்த ஆண்டு நவம்பர் 17-ம் தேதிவரை, 13 மாதங்களுக்கு அவர் பதவியில் நீடிப்பார். கடந்த ஜனவரி மாதத்தில், தலைமை நீதிபதியாக இருந்த தீபக் மிஸ்ரா-வுக்கு எதிராக குரல்கொடுத்த 4 நீதிபதிகளில் கோகாயும் ஒருவர். தலைமை நீதிபதி பொறுப்பேற்கும் அவர், பல்வேறு முக்கிய வழக்குகளை விசாரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO WATCH...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Cheif Justice Of India, CJI, New Cheif Justice, Ranjan Gogai, Supreme court judge