ஏனாமில் வேட்பு மனுத் தாக்கல் செய்யும்போது யமஹா ஆர்.எக்ஸ்.100 பைக் ஓட்டி அசத்திய ரங்கசாமி

ரங்கசாமி

என்.ஆர்.காங்கிரஸ் தலைவரான ரங்கசாமி தனது வேட்பு மனுவை ஏனாமில் இன்று தாக்கல் செய்தார்.

  • Share this:
என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி 2 தொகுதியில் போட்டியிடுகிறார். ஏற்கனவே தட்டாஞ்சாவடி தொகுதியில் அவர் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ள நிலையில் இன்று சேலம் தொகுதியில் போட்டியிடுவதற்கு புதுச்சேரியில் இருந்து 813 கி.மீ தூரமுள்ள ஏனாம் பிராந்தியம் சென்றுள்ளார். அங்கு அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு முன்னாள் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தலைமையில் அளிக்கப்பட்டது.

தொடர்ந்து தொண்டர்கள் இருசக்கர வாகனத்தில் அணிவகுத்துச் செல்ல ரங்கசாமி ஏனாம் மண்டல நிர்வாக அதிகாரி அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ரங்கசாமி ஒரு யமகா பைக் பிரியர். இதனை அறிந்த ஒரு தொண்டர் அவருக்கு பைக் ஒன்றை ரெடியாக துடைத்து வைத்திருந்தார்.

இதனை அறிந்த ரங்கசாமி தொண்டனின் ஆசையை அறிந்து கொஞ்ச தூரம் பைக்கில் பயணித்து விட்டு தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ஏற்கனவே ரங்கசாமி 2011 ஆம் ஆண்டு இந்திரா நகர், கதிர்காமம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: