• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • குடியரசு தின உரையில் கொரோனா முன்களப் பணியாளர்களைப் பாராட்டிய ராம்நாத் கோவிந்த்

குடியரசு தின உரையில் கொரோனா முன்களப் பணியாளர்களைப் பாராட்டிய ராம்நாத் கோவிந்த்

ராம்நாத் கோவிந்த்

ராம்நாத் கோவிந்த்

தங்களின் உயிர்களையும்கூட பொருட்படுத்தாமல், பல இடர்களை எதிர்கொண்ட மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள், நலவாழ்வுத் துறையோடு தொடர்புடைய நிர்வாகத்தினர், துப்புரவுப் பணியாளர்களைக் குறிப்பிட்டு பாராட்ட விரும்புகிறேன் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    குடியரசு தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று சிறப்புரையாற்றினார். அதில் பேசிய அவர், ‘இன்றைய நாள், உள்நாட்டிலும் அயல்நாடுகளிலும் வசிக்கும் அனைத்து இந்தியர்களுக்கும் மிகவும் மகத்துவம் நிறைந்த ஒன்று. இதே நாளன்று தான் 71 ஆண்டுகள் முன்பாக, நம் நாட்டவர்கள் தங்களுடைய ஈடு இணையில்லாத அரசியலமைப்புச் சட்டத்தை அங்கீகரித்து, சட்டமாக்கி அர்ப்பணித்தார்கள். அரசியலமைப்புச் சட்டத்தின் குறிக்கோளாகப் பொறிக்கப்பட்டிருக்கும் நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் என்ற வாழ்க்கைத் தத்துவங்கள், நம்மனைவருக்கும் புனிதமான ஆதர்ஸங்கள். ஆகையால் ஆட்சியாளர்களின் பொறுப்பில் அமர்ந்திருப்பவர்கள் மட்டுமில்லாமல், பொதுமக்களாகிய குடிமக்கள் நாமனைவரும் இந்த ஆதர்ஸங்களை உறுதியோடும், அர்ப்பணிப்போடும் பின்பற்ற வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பெரும் மக்கட்தொகை கொண்ட நமது தேசத்தை உணவுதானியங்கள் மற்றும் பால்பொருட்கள் உற்பத்தியில் தன்னிறைவு அடையச் செய்யும் நமது விவசாய சகோதர சகோதரிகள் அனைவரையும், நாட்டுமக்கள் அனைவரும் வாழ்த்துகிறார்கள். தீவிரமான இயற்கைச் சூழல்களையும், அநேக சவால்களையும், கொரோனா பெருந்தொற்று ஆகியவற்றையும் தாண்டி நமது விவசாய சகோதர சகோதரிகள், வேளாண் உற்பத்தியில் எந்தக் குறைவையும் ஏற்பட விடவில்லை.

    நமது இராணுவத்தில் இருக்கும் சாகஸ வீரர்களும், கடுமையான சூழ்நிலைகளிலும், தேசத்தின் எல்லைகளின் பாதுகாப்பை உறுதி செய்கின்றார்கள். கொரோனா பாதிக்கப்பட்டவர்களைப் பராமரிக்க, தங்களின் உயிர்களையும்கூட பொருட்படுத்தாமல், பல இடர்களை எதிர்கொண்ட மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவப் பணியாளர்கள், நலவாழ்வுத் துறையோடு தொடர்புடைய நிர்வாகத்தினர், துப்புரவுப் பணியாளர்கள் ஆகியோரைக் குறிப்பிட்டுப் பாராட்ட விரும்புகிறேன். இவர்களில் சிலர் தங்கள் இன்னுயிரையும் இழந்திருக்கிறார்கள். இவர்களோடு கூடவே, இந்தப் பெருந்தொற்றுக்கு ஒண்ணரை லட்சம் பேர்கள் இரையாகியிருக்கின்றார்கள். அவர்களை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கு, நான் என் இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: