• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • என்.ஆர்.காங்கிரஸில் இணைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகிய ரமேஷ்...

என்.ஆர்.காங்கிரஸில் இணைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகிய ரமேஷ்...

என்.ஆர் காங்கிரஸில் இணைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகிய ரமேஷ்...

என்.ஆர் காங்கிரஸில் இணைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகிய ரமேஷ்...

புதுச்சேரியில் என்.ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி பாஜக உடன் கூட்டணி அமைப்பதில் தொடர்ந்து தயக்கம் காட்டி வருகிறார். இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகியுள்ள ரமேஷ் என்.ஆர் காங்கிரஸில் இணைந்தார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து பா.ஜ.க தேர்தலை சந்திக்க வியூகம் வகுத்து வருகிறது. அதேநேரம், பாஜக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக தன்னை அறிவிக்க வேண்டும், என்.ஆர் காங்கிரஸுக்கு 20 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று ரங்கசாமி நிபந்தனை விதித்துள்ளார். இதனை ஏற்காத பட்சத்தில் தனித்து போட்டியிடவும் ரங்கசாமி பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் கூட்டணியை இறுதி செய்வதில் இழுபறி நீடிப்பதால் சனிக்கிழமை நடைபெற இருந்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

    என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி மக்கள் நலன் கருதி நல்ல முடிவு எடுப்பார் என பாஜக மாநில தலைவர் சாமிநாதன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரமேஷ் தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகு ரங்கசாமி முன்னிலையில் என்.ஆர் காங்கிரஸில் இணைந்தார். இதேபோன்று வன்னியர் கூட்டமைப்பு தலைவர் செந்திலும் என்.ஆர்.காங்கிரஸில் இணைந்து கொண்டார்.

    மேலும் படிக்க... Exclusive | புதுச்சேரியில் திரைப்பட பாணியில் தீவுக்குள் சோதனை செய்த போலீஸ்.. 8,000 லிட்டர் கள்ளச்சாராய மூலப்பொருள்கள் அழிப்பு..

    சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அஷ்டமி, நவமி என்பதால் திங்கட்கிழமையே கூட்டணி குறித்து ரங்கசாமி முடிவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, காங்கிரஸில் இருந்து அண்மையில் விலகிய கண்ணன், பாஜக மேலிட பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான அர்ஜுன் ராம் மேக்வாலை சந்தித்து பேசினார். இதனால், கண்ணன் பாஜகவில் இணைய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: