RAMESH JARKIHOLI ISNT THE FIRST SEX SCANDALS HAVE ROCKED KARNATAKA POLITICS IN THE PAST ARU
கர்நாடக அரசியலை அதிரவைத்த பாலியல் குற்றச்சாட்டுகள்!
ஜார்கிஹோளி
கர்நாடக அரசியலில் ஆபாச வீடியோ விவகாரம் பூதாகரமானது முதல் முறையாக நடக்கும் நிகழ்வு அல்ல, இதற்கு முன்னதாகவே பல வீடியோக்கள் வெளியாகி பலரும் ராஜினாமா செய்திருக்கின்றனர்.
இளம் பெண்ணுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டி இளம் பெண்ணுடன் பல முறை உடலுறவு வைத்துக் கொண்டதாக கர்நாடகா பாஜக அரசின் நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ரமேஷ் ஜார்கிஹோளி மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பாகியுள்ளது. இது தொடர்பான வீடியோ, சிடிக்கள் அடங்கிய ஆதாரத்துடன் போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் குமாரசாமி தலைமை காங்கிரஸ்-ம.ஜ.த கூட்டணி ஆட்சியைக் கவிழ்த்து மீண்டும் எடியூரப்பா தலைமை பாஜக ஆட்சி அமைய முக்கியக் காரணம் ரமேஷ் ஜார் சிஹோளிதான் என்று கூறப்படுகிறது.
இளம் பெண் ஒருவருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி அவருக்கு ஆசை காட்டி பலமுறை அவருடன் உடலுறவு கொண்டதாக ரமேஷ் ஜார் சிஹோளி உறவு வைத்துக் கொண்டதாக கன்னட டிவி சேனல்கள் பரபரப்பு செய்தி வெளியிட்டது. சிடியில் மெத்தை மீது அமைச்சரும் பெண்ணும் நெருக்கமாக இருக்கும் வீடியோ படங்கள், மொபைல் போனில் இருவரும் பேசிக்கொண்டதாகக் கூறப்படும் ஆடியோ பேச்சும் உள்ளது. இந்த ஆதாரங்களின் உண்மைத்தரம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் புயலை கிளப்பிய நிலையில் அமைச்சர் பதவியை ஜார்கிஹோளி ராஜினாமா செய்தார்.
மேஷ் ஜார்கிகோளி தனது ராஜினாமா கடிதத்தில், "என் மீது எழுந்துள்ள புகார்கள் உண்மைக்கு புறம்பானவை. இதுகுறித்து விரைவாக விசாரணை நடத்த வேண்டும். நான் நிரபராதி ஆவேன் என்ற நம்பிக்கை இருந்தாலும், தார்மீக பொறுப்பேற்று நான் எனது மந்திரி பதவியை ராஜினாமா செய்கிறேன். இந்த ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
கர்நாடக அரசியலில் ஆபாச வீடியோ விவகாரம் பூதாகரமானது முதல் முறையாக நடக்கும் நிகழ்வு அல்ல, இதற்கு முன்னதாகவே பல வீடியோக்கள் வெளியாகி பலரும் ராஜினாமா செய்திருக்கின்றனர்.
ரேணுகாச்சார்யா:
கர்நாடக முதல்வர் எடியூரப்பாவின் அரசியல் செயலராக இருந்தவர் ரேணுகாச்சார்யா, 2008 - 13 வரை கலால் துறை அமைச்சராக இருந்துள்ளார்.
செவிலியர் ஜெயலட்சுமி என்பவர் ரேணுகாச்சார்யாவுடன் இருந்த புகைப்படங்களை ஊடகங்களுக்கு வெளியிட்டு, தனக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக ரேணுகாச்சார்யா மீது குற்றம் சுமத்தினார். இதன் காரணமாக ரேணுகாச்சார்யா தனது பதவியை ராஜினாமா செய்தார்.
ஹர்த்தலு ஹலப்பா:
பாஜகவைச் சேர்ந்த ஹர்த்தலு ஹலப்பா, 2009ல் உணவுத்துறை அமைச்சராக இருந்த போது தன்னுடைய நண்பரின் மனைவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இதன் காரணமாக அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். 2017-ல் போதிய ஆதாரங்களை அளிக்கவில்லை என்பதால் அவரை நீதிமன்றம் விடுவித்தது.
ரகுபதி பாட்:
2008 முதல் 2013ம் ஆண்டு வரை பாஜக சார்பில் உடுப்பி தொகுதி எம்.எல்.ஏவாக இருந்தவர் ரகுபதி பாட். தேர்தல் நேரத்தில் ரகுபதி சம்பந்தப்பட்ட ஆபாச வீடியோ ஒன்றை செய்தி சேனல்கள் ஒளிபரப்பின. இதன் காரணமாக அந்த தேர்தலில் அவர் போட்டியிடாமல் தவிர்த்தார். இருப்பினும் கடந்த முறை 2018ல் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏவானார்.
லக்ஷ்மன் சவாடி:
2012ம் ஆண்டு கர்நாடக சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றுக்கொண்டிருந்த போது ஆபாச வீடியோக்கள் பார்த்ததாக லக்ஷ்மன் சவாடி, கிருஷ்ன பாலேமர் மற்றும் சிசி பாட்டில் ஆகியோரது மீது குற்றம்சாட்டப்பட்டது. தேசிய அளவில் கவனம் பெற்ற இந்த விவகாரம் தொடர்பாக மாநில உள்துறை அமைச்சகம் விசாரணை நடத்தியது. அவர் மீதான குற்றச்சாட்டு தவறானது என நிரூபிக்கப்பட்டது. அவர் தற்போது துணை முதல்வராக இருந்து வருகிறார்.
ஹை மேதி:
இதுவரை பாஜகவைச் சேர்ந்தவர்களே ஆபாச விவகாரங்களில் சிக்கியதைப் பார்த்தோம் அதற்காக காங்கிரஸை சேர்ந்தவர்களும் சளைத்தவர்கள் கிடையாது. 2016ல் அமைச்சராக இருந்த ஹை மேதி தொடர்பான ஆபாச வீடியோ ஒன்று வைரலானதால் அவர் பதவியை ராஜினாமா செய்தார்.
அர்விந்த் லிம்பவேளி:
பாஜகவைச் சேர்ந்த மகாதேவபுரா தொகுதி எம்.எல்.ஏ தொடர்பான ஆபாச வீடியோ ஒன்று 2019ம் ஆண்டு ஜூலையில் வெளியானது. அதில் இருப்பது நான் இல்லை என்று சட்டமன்றத்திலேயே அவர் அழுதார். பின்னர் டிசம்பர் 2019ல் தடயவியல் அறிக்கையில் அந்த வீடியோ போலியானது என்பது நிரூபாமானது.