• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • 2004-ல் மன்மோகனுக்கு பதில் சோனியா பிரதமர் ஆகியிருக்க வேண்டும் – மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே

2004-ல் மன்மோகனுக்கு பதில் சோனியா பிரதமர் ஆகியிருக்க வேண்டும் – மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே

ராம்தாஸ் அத்வாலே

ராம்தாஸ் அத்வாலே

2004ம் ஆண்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி பதவிக்கு வந்த போது, சோனியா காந்தி பிரதமராகி இருக்க வேண்டும் என்று ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார்.

  • Share this:
    இந்திய குடியரசுக் கட்சியின் தலைவராக இருப்பவர் ராம்தாஸ் அத்வாலே. அவர், நீண்ட காலமாக பா.ஜ.க கூட்டணியில் இருந்துவருகிறார். தற்போது அவர், மத்திய அரசின் சமூக நலத்துறையின் இணையமைச்சராக இருந்துவருகிறார். மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில், செய்தியாளர்களை சந்தித்த இந்திய குடியரசுக் கட்சித் தலைவர் ராம்தாஸ் அத்வாலே, இந்தியாவை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை அதிபர் ஆகும் போது, சோனியா காந்தியும் இந்தியாவின் பிரதமராகி இருக்கலாம் என்றார்.

    மேலும் மண்மோகன் சிங்குக்கு பதிலாக 2004ல் சரத்பவாரை பிரதமராக்கி இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பஞ்சாபில் அண்மையில் பதவி விலகிய கேப்டன் அமரீந்தர் சிங் பாஜகவில் இணைய வேண்டும் என்றும் ராம்தாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். அமரீந்தர் சிங் இணைந்தால் பாரதிய ஜனதா கட்சி வலுப்பெறும் என்றும் அத்வாலே தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: