ஹோம் /நியூஸ் /இந்தியா /

போருக்குப் பிறகுதான் அமைதி! பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வலியுறுத்தும் ராம்தேவ்

போருக்குப் பிறகுதான் அமைதி! பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வலியுறுத்தும் ராம்தேவ்

பாபா ராம்தேவ்

பாபா ராம்தேவ்

பாபா ராம்தேவ் புல்வாமா தாக்குதல் குறித்தும் காட்டமான சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

போருக்குப் பிறகுதான் அமைதி திரும்பும் என்று புல்வாமா தாக்குதல் விவகாரம் தொடர்பாக நியூஸ் 18 உச்சி மாநாட்டில் பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மிகப்பெரும் மீடியா நெட்வொர்க்கான நியூஸ் 18 , இரண்டாம் ஆண்டாக ரைசிங் இந்தியா மாநாட்டை ஒருங்கிணைக்கிறது. இரண்டு நாள்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி, மத்தியப் பிரதேச மாநில முதல்வர் கமல்நாத், கமல்ஹாசன், தீபிகா படுகோனே, அமித்ஷா உள்ளிட்டவர்கள் பங்கேற்கின்றனர்.

இன்றைய முதல் அமர்வில், சத்குரு மற்றும் பாபா ராம் தேவ் பற்கேற்றனர். பல விஷயங்கள் குறித்து பேசிய பாபா ராம்தேவ் புல்வாமா தாக்குதல் குறித்தும் காட்டமான சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

புல்வாமா தாக்குதல் விவகாரம் குறித்து பேசிய பாபா ராம்தேவ், ‘புல்வாமா தாக்குதல் எதிர்பாராதவிதமாக நடைபெற்றது அல்ல. அது தீவிரமாக திட்டமிடப்பட்டது. நாம் அமைதியான கலாச்சாரத்தைக் கொண்டுள்ளோம். அமைதியான நாட்டையும் கொண்டுள்ளோம். நம் நாட்டின் மீது யாருடைய பார்வையாவது தவறாக இருந்தால், அவர்கள் கண்ணை தோண்டி எடுக்கவேண்டும்.

நான், அப்பாவிகளைக் கொல்லச் சொல்லவில்லை. ஆனால், தக்க பதிலடி கொடுக்கவேண்டும். போருக்குப் பிறகுதான் அமைதி திரும்பும். போர் ஒன்றே தீர்வு தரும். அப்போதுதான் பாகிஸ்தானை புனிதப்படுத்த முடியும்’ என்று தெரிவித்தார்.

First published:

Tags: Baba Ramdev, NEWS18 RISING INDIA