கங்கனா பாஜகவில் இணைந்தால் வரவேற்போம் - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே

கங்கனா பாஜகவில் இணைந்தால் வரவேற்போம் - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே
மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே
  • News18
  • Last Updated: September 11, 2020, 9:57 AM IST
  • Share this:
நடிகை கங்கனா ரனாவத் பாஜகவிலோ, குடியரசு கட்சியிலோ சேர்ந்தால் வரவேற்போம் என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறியுள்ளார்.

மும்பை குறித்து நடிகை கங்கனா கடுமையாக விமர்சித்த நிலையில், அவரின் வீடு விதிகளை மீறி கட்டியதாக கூறி மாநகராட்சி அதிகாரிகள் பங்களாவின் ஒரு பகுதியை இடித்தனர்.

இதை எதிர்த்து கங்கனா மனுதாக்கல் செய்த நிலையில், வீட்டை இடிக்க மும்பை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இந்த சூழலில் நடிகை கங்கனா ரனாவத்தை இந்திய குடியரசு கட்சி தலைவரும், மத்திய அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே நேரில் சந்தித்தார்.


Also read... திரையரங்குகளில் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப அனுமதியளிக்க வாய்ப்பு இல்லை - அமைச்சர் கடம்பூர் ராஜூ

அவரிடம் பேசிய பிறகு செய்தியாளர்களை சந்தித்த ராம்தாஸ் அத்வாலே, கங்கனாவிற்கு அரசியலில் விருப்பம் இல்லை எனவும், ஆனால் சமூகத்தில் ஒற்றுமையை நிலைநாட்ட அவர் ஆர்வமாய் இருப்பதாகவும் கூறினார்.

மேலும், நடிகை கங்கனா ரனாவத் பாஜகவில் அல்லது இந்திய குடியரசு கட்சியில் சேர்ந்தால் வரவேற்போம் என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறியுள்ளார்.
First published: September 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading