முகப்பு /செய்தி /இந்தியா / மத்திய அமைச்சரை கன்னத்தில் திடீரென அறைந்த நபரால் பரபரப்பு

மத்திய அமைச்சரை கன்னத்தில் திடீரென அறைந்த நபரால் பரபரப்பு

மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே

மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே

மகாராஷ்டிராவில் அமைச்சர் ராமதாஸ் அத்வாலேவை கன்னத்தில் அறைந்த நபரை சுற்றி வளைத்த கட்சித் தொண்டர்கள் சரமாரியாக தாக்கினர்.அவரது பெயர் கோஸாவி எனத் தெரியவந்துள்ளது.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில், மத்திய சமூகநலத்துறை இணை அமைச்சர் ராமதாஸ் அத்வாலேவை கன்னத்தில் அறைந்த நபரை தொண்டர்கள் அடித்து உதைத்தனர்.

இந்திய குடியரசு கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ராமதாஸ் அத்வாலே. இவர் புனேவில் உள்ள அம்பர்நாத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் நேற்று பங்கேற்றார். அப்போது நிகழ்ச்சி முடிவடைந்தவுடன் அங்கிருந்து வெளியேறிய அமைச்சரை ஒருவர் திடீரென கன்னத்தில் அறைந்தார்.

Slap Minister | அமைச்சரை அறைந்த பிரவீன் கோaசவியை சரமாரியாக தாக்கிய தொண்டர்கள்
அமைச்சரை அறைந்த பிரவீன் கோசவியை சரமாரியாக தாக்கிய தொண்டர்கள்

இதையடுத்து அந்த நபரை சுற்றி வளைத்த அந்த கட்சித் தொண்டர்கள் சரமாரியாக தாக்கினர். பின்னர் அவரை போலீஸிடம் ஒப்படைத்தனர். அதன்பின் அவர் மருத்துவமனனையில் அனுமதிக்கப்பட்டார். போலீசார் விசாரணையில், அவரது பெயர் பிரவீன் கோஸாவி எனத் தெரியவந்தது.

அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Also see...மேகதாது தீர்மானத்தில் மத்திய அரசு மீது விமர்சனம் இல்லை.. எதிர் கட்சிகளின் குற்றசாட்டு...

First published:

Tags: Ramdoss Athawale