• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ராமர் காட்டுக்கு சென்ற பாதையை கட்டமைக்க மத்திய அரசு முடிவு

ராமர் காட்டுக்கு சென்ற பாதையை கட்டமைக்க மத்திய அரசு முடிவு

ராமர் கோயில் அலங்கார ஊர்தி

ராமர் கோயில் அலங்கார ஊர்தி

அயோத்தியிலிருந்து ராமர் காட்டுக்கு சென்ற பாதையை உத்தரப் பிரதேசத்தில் கட்டமைக்க மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

  • Share this:
    அயோத்தியிலிருந்து ராமர் காட்டுக்கு சென்ற பாதையை உத்தரப் பிரதேசத்தில் கட்டமைக்க மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

    உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பாஜக ஆட்சி நடக்கிறது. ராமாயணத்தில் ராமபிரான், தன் தந்தையின் கட்டளைப்படி, தன் மனைவி சீதை, தம்பி லட்சுமணனுடன், அயோத்தியிலிருந்து, காட்டுப்பகுதியில் அமைந்திருந்த சித்ரகூட் என்ற இடத்துக்கு முதலில் சென்றார்.

    இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தியிலிருந்து, சித்ரகூட்டிற்கு ராமர் சென்ற பாதையை, 'ராம் வன் காமன் மார்க்' என்ற பெயரில் கட்டமைக்க, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டு உள்ளது.

    அயோத்தியிலிருந்து, 210 கி.மீ., துாரத்தில் உள்ள சித்ரகூட்டிற்கு, பைசாபாத், சுல்தான்பூர், பிரதாப்கர், ஜெத்வாரா, ராஜாபூர் வழியாக தனிப்பாதை கட்டமைக்கப்பட உள்ளது என, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

    ராமாயணத்தில், ராமபிரான், 14 ஆண்டுகள் காட்டில் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பல பகுதிகள், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மஹாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் அமைந்துள்ளன.மத்திய பிரதேச முதல்வர், பா.ஜ.,வைச் சேர்ந்த சிவ்ராஜ் சிங் சவுகான், சத்தீஸ்கர் முதல்வர்; காங்கிரசைச் சேர்ந்த பாஹெல் ஆகியோரும், தங்கள் மாநிலங்களில் ராமர் காட்டுக்கு சென்ற பாதையை உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.

    இதற்கிடையே உ.பி.யில் நாகா சாது ஒருவர் நேற்று அடித்துக் கொல்லப்பட்டது பெரிய சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. தெய்வீக நகராமான அயோத்தியின் ஸ்ரீராமஜென்ம பூமி கோயிலுக்கு அருகிலுள்ளது ஹனுமர் கோயில் மடம். இதன் நிர்வாகத்திற்குட்பட்ட சரண்படுகா கோயிலின் மடத்தின் பொறுப்பாளராக இருப்பவர் கன்னைய்யா தாஸ் (45).

    நாகா சாதுவான இவர் அக்கோயிலின் கோசலையில் இன்று காலை அடித்துக் கொல்லப்பட்ட நிலையில் கிடைந்துள்ளார். இவரது தலையில் கல்லால் அடித்துக் கொல்லப்பட்டிருப்பது தெரிந்தது.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அயோத்தி நகர எஸ்பி விஜய் பால்சிங், கன்னையா தாஸின் உடல் உடற்கூறு பரிசோதனைக்கும் அனுப்பி வைத்தார். இச்சம்பவம் மீதான தகவல் அயோத்தியில் பரவி அங்குள்ள நாகா சாதுக்கள் பலரும் காவல் நிலையத்தை முற்றுகையிட்டுள்ளதாக உ.பி.யிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: