அமைச்சரவையில் வல்லபாய் படேல் இடம்பெறுவதை நேரு விரும்பவில்லையா? மத்திய அமைச்சருக்கு ராமச்சந்திர குஹா பதில்

அமைச்சரவையில் வல்லபாய் படேல் இடம்பெறுவதை நேரு விரும்பவில்லையா? மத்திய அமைச்சருக்கு ராமச்சந்திர குஹா பதில்
ராமச்சந்திர குஹா
  • Share this:
நவீன இந்தியாவை வடிவமைத்தவர்கள் குறித்து போலியான செய்திகளைப் பரப்புவது மத்திய அமைச்சரின் வேலை அல்ல என்று வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா கண்டனம் தெரிவித்துள்ளார். 

எழுத்தாளர் நாராயணி பாபு எழுதிய வி.பி.மேன்னின் வாழ்க்கையைப் புரிந்துகொள்ளுதல் என்ற புத்தகம் வெளியிட்டு விழா நேற்று நடைபெற்றது. அந்த விழாவில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கர் கலந்துகொண்டார். அந்தப் புத்தகம் குறித்த அவருடைய ட்விட்டர் பதிவில், ‘இந்தப் புத்தகத்திலிருந்து 1947-ம் ஆண்டு அமைக்கப்பட்ட முதல்கட்ட மத்திய அமைச்சரவையில் சர்தார் வல்லபாய் படேலுக்கு நேரு இடமளிக்கவில்லை என்று தெரிந்துகொள்ள முடிகிறது. இது விவாதத்துக்குரியது’ என்று குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்துள்ள வரலாற்றாசிரியர் இராமச்சந்திர குஹா, ‘இது கட்டுக் கதை. தி பிரின்ட்டில் பேராசிரியர் ஸ்ரீநாத் ராகவன் எழுதிய கட்டுரையால் இந்தக் கட்டுக்கதை முழுவதுமாக அழிக்கப்பட்டது. நவீன இந்தியாவை கட்டமைத்தவர்களைப் பற்றி தவறான செய்திகளைப் பரப்புவது வெளியவுறவுத்துறை அமைச்சரின் பணி அல்ல. அந்த வேலையை பா.ஜ.க தொழில்நுட்ப பிரிவுக்கு அவர் கொடுக்க வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார்.


காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர், ‘வல்லபாய் பட்டேல் அமைச்சரவையில் இருப்பதற்கு நேரு விரும்பவில்லை என்று பல போலியான கடிதங்கள் உலாவருகின்றன. புதிய அமைச்சரவை குறித்து ஜவஹர்லால் நேரு 1947-ம் ஆண்டு ஜூலை 19-ம் தேதி மவுண்ட் பேட்டனுக்கு எழுதிய கடிதம். இதுதான் உண்மை’என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், கடிதம் ஒன்றையும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

பிரிட்டிஷ் இந்தியாவை ஆட்சி செய்த காலத்தில் குடிமைப் பணி அதிகாரியாக இருந்தவர் வி.பி.மேனன். அவர், அரசியலமைப்புச் சட்ட ஆலோசகராகவும் இருந்தார்.

Also see:


 
First published: February 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்