'ஒரு நாடு, ஒரே ரேஷன் அட்டை' திட்டம் அடுத்த ஆண்டு அமல்... மத்திய அமைச்சர் தகவல்...!

'ஒரு நாடு, ஒரே ரேஷன் அட்டை' திட்டம் அடுத்த ஆண்டு அமல்... மத்திய அமைச்சர் தகவல்...!
மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான்
  • News18
  • Last Updated: December 4, 2019, 11:35 AM IST
  • Share this:
ஒரு நாடு, ஒரே ரேஷன் அட்டை திட்டம், அடுத்த ஆண்டு ஜூன் ஒன்றாம் தேதி அமல்படுத்தப்படும் என்று மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் இதுகுறித்து விளக்கம் அளித்த ராம்விலாஸ் பாஸ்வான், தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்கீழ், நியாயவிலைக் கடைகளில் பயனாளிகளுக்கு மானிய விலையில் உணவுதானியங்கள் கிடைப்பதை உறுதிப்படுத்தவே இந்த திட்டம் கொண்டுவரப்படுவதாக கூறினார்.

இதன்மூலம், இடம்பெயரும் தொழிலாளர்கள், தினக் கூலி தொழிலாளர்கள், வேலைவாய்ப்புக்காக அடிக்கடி ஓரிடத்திலிருந்து வேறு இடத்துக்கு செல்வோர் பயன்பெறுவார்கள் என்று அமைச்சர் கூறினார்.


இந்த திட்டத்தின்கீழ், நியாயவிலைக் கடைகளில் உள்ள மின்னணு விற்பனை இயந்திரங்களில் பயனாளிகளின் ஆதார் விவரங்கள் சேர்க்கப்பட்டபின், பொருட்களை பெறலாம் என்றும் ராம்விலாஸ் பாஸ்வான் கூறினார்.

Also see...
First published: December 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...