ராமர் கோவில் வேலைகள் அமைதியாக நடைபெற வேண்டும் - பிரதமர் மோடி

ராமர் கோவில் வேலைகள் அமைதியாக நடைபெற வேண்டும் - பிரதமர் மோடி
பிரதமர் மோடி
  • Share this:
மதநல்லிணக்கத்தைக் கெடுக்கும் வகையிலோ, வெறுப்பைத் தூண்டும் வகையிலோ ராமர் கோவில் வேலைகள் செய்யப்படக்கூடாது என்று தெரிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக ”ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா" என்ற அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக நிருத்ய கோபால்தாஸ் மற்றும் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து பேசியது அறக்கட்டளைக் குழு. ராமர் கோவில் அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத் ராய் செய்தியாளர்களிடம் பேசியபோது, ”ராமர் கோவில் கட்டுமான பணிகள் மதநல்லிணக்கத்திற்குக் கேடு அல்லது வெறுப்புணர்வை தூண்டிவிடாமல் அமைதியாக நடைபெற வேண்டும்” என்று பிரதமர் மோடி எங்களிடம் அறிவுறுத்தினார். நாட்டில் நிலவும் அமைதியான சூழ்நிலைக்கு எந்த இடையூறும் ஏற்படக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார்” என்று தெரிவித்துள்ளார்.

Also See...


First published: February 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்