ஹோம் /நியூஸ் /இந்தியா /

2024 ஜனவரியில் திறக்கப்படும் அயோத்தி ராமர் கோவில் .. 50% பணி முடிந்தது.

2024 ஜனவரியில் திறக்கப்படும் அயோத்தி ராமர் கோவில் .. 50% பணி முடிந்தது.

2024 ஜனவரியில் திறக்கப்படும் அயோத்தி ராமர் கோவில் .. 50% பணி முடிந்தது.

2024 ஜனவரியில் திறக்கப்படும் அயோத்தி ராமர் கோவில் .. 50% பணி முடிந்தது.

1,800 கோடி ரூபாய் செலவில் தயாராகும் இக்கோவில் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் தரை தளம் தயாராகி 2024 ஜனவரி 14 ஆம் தேதி ராமர் சிலைகள் நிறுவப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Ayodhya |

  அயோத்தியில் உள்ள பிரமாண்ட ராமர் கோவில், தெய்வச் சிலைகள் நிறுவப்பட்ட பிறகு, ஜனவரி 2024-ல் பக்தர்களுக்குத் திறக்கப்படும் என்று, அதன் கட்டுமானத்தை மேற்பார்வையிட அமைக்கப்பட்ட அறக்கட்டளையின் முக்கிய உறுப்பினர் கூறினார்.

  நவம்பர் 9, 2019 அன்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு, அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வழி வகுத்தது. அதன் பிறகு ஆகஸ்ட் 5, 2020 அன்று கோவில் கட்டுவதற்கான "பூமி பூஜை"யை பிரதமர் செய்தார்.

  இத்திட்டத்தின்படி, ராமர் கோயிலுக்கு அருகில் 70 ஏக்கர் பரப்பளவில் வால்மீகி, கேவட், ஷபரி, ஜடாயு, சீதா, விநாயகர் , லட்சுமணன் அகியோயவர்களுக்கு கோயில்களும் கட்டப்படும் என தெரிகிறது.

  காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றார் மல்லிகார்ஜுன கார்கே - பொறுப்புகளை ஒப்படைத்தார் சோனியா காந்தி

  ராமர் கோயிலின் 50 சதவீத கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், ஒட்டுமொத்த முன்னேற்றம் திருப்திகரமாக இருப்பதாகவும் ராமர் கோவில் அறக்கட்டளை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

  2024 ஜனவரியில் மகர சங்கராந்தி தினத்தன்று கோயிலின் கருவறையில் ராமர் சிலை நிறுவப்பட்ட பிறகு கோயில் பக்தர்களுக்கு திறக்கப்படும் என்று அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத் ராய்  தெரிவித்தார்.

  1,800 கோடி ரூபாய் செலவில் தயாராகும் இக்கோவில் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் தரை தளம் தயாராகி 2024 ஜனவரி 14 ஆம் தேதி ராமர் சிலைகள் நிறுவப்படும்.

  கண்காணிப்பு சாதனம் இல்லாத பஸ், டாக்ஸிகளுக்கு நவம்பர் முதல் ஃபைன் - சண்டிகரில் புது ரூல்

  கோவிலின் பரப்பளவு மற்றும் அதன் முற்றம் உட்பட மொத்தம் எட்டு ஏக்கர் நிலத்தை உள்ளடக்கிய செவ்வக பகுதி, இரண்டு அடுக்கு 'பரிக்கிரமா' சாலையும் அமைக்கப்பட்டு வருகிறது. அதன் கிழக்குப் பகுதியில் மணற்கற்களால் ஆன நுழைவாயில் இருக்கும். கோவிலின் கருவறைக்குள் ராஜஸ்தானில் உள்ள மக்ரானா மலைகளில் இருந்து வெள்ளை பளிங்கு பயன்படுத்தப்படும்.

  2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பக்தர்களுக்காக கோயில் திறக்கப்படுவது அரசியல் ரீதியாகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது, ஏனெனில் அந்த ஆண்டின் இறுதியில் மக்களவைத் தேர்தல்கள் திட்டமிடப்பட்டுள்ளன.

  அயோத்தி பிரச்சனையை பாஜக நீண்ட காலமாக முன்னிலைப்படுத்தி வருகிறது, மேலும் பக்தர்களுக்காக கோவில் திறக்கப்படுவது இந்துக்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  Published by:Ilakkiya GP
  First published:

  Tags: Ayodhya Ram Temple, Uttar pradesh