ராமர் கோவில் கட்டுமானத்துக்கு இரும்பு பயன்படுத்தப்படாது. கற்கள் மட்டும்தான் - கட்டுமான மேற்பார்வையாளரின் தகவல்கள் என்னென்ன?

கோவிலின் மாதிரி வடிவம்

இரும்பும், ஸ்டீலும் பயன்படுத்தப்படாது என தகவல் தெரிவித்திருக்கிறார் கட்டுமான மேற்பார்வையாளர் அனு பாய் சோம்புரா.

 • Share this:
  அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவில் கட்டுமானத்துக்கு கற்கள் மட்டுமே பயன்படுத்தப்பட இருக்கிறது. இரும்பும், ஸ்டீலும் பயன்படுத்தப்படாது என தகவல் தெரிவித்திருக்கிறார் கட்டுமான மேற்பார்வையாளர் அனு பாய் சோம்புரா.

  மரம், செம்பு, வெள்ளை சிமெண்ட், ராஜஸ்தான் கற்கள் ஆகியவை மட்டுமே கட்டுமானத்துக்கு பயன்படுத்தப்போகிற பொருட்கள் என ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு தெரிவித்திருக்கிறார்.

  ராம ஜென்மபூமி அறக்கட்டளை உறுப்பினரான காமெஷ்வர் சவுபால், “எதிர்காலத்தில் கோவில் வரலாற்றை அறிந்துகொள்ளும் வகையில், 2000 அடி ஆழத்துக்கு அடியில் டைம் கேப்ஸ்யூல் பொருத்தப்பட இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.
  Published by:Gunavathy
  First published: