அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் தொடங்கின - எப்போது முடியும் தெரியுமா?

கோவிலின் மாதிரி வடிவம்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளுக்கான மண் பரிசோதனையை பொறியாளர்கள் தொடங்கியுள்ளனர்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  அயோத்தியில் கடந்த 5ம் தேதி ராமர் கோயில்கட்டுமானத்துக்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் வெள்ளி செங்கற்களை வைத்து பிரதமர் மோடி கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தார்.

  இந்நிலையில் சென்னை ஐஐடி மற்றும் எல் அண்ட் டி நிறுவன பொறியாளர்கள் கோயில் கட்ட உள்ள இடத்தில் மண் பரிசோதனை செய்தனர். 36 முதல் 40 மாதங்களில் கட்டுமானப்பணிகள் முடியும் என்று கூறப்படுகிறது.

  Also read... உங்களது ஓய்வு முடிவு 130 கோடி இந்தியர்களையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது - தோனிக்கு மோடி புகழாரம்

  பழமையான இந்திய பாரம்பரிய நுட்பங்கள் மூலம் இந்த கோயில் கட்டப்பட உள்ளது. நிலநடுக்கம், புயல் மற்றும் இயற்கை பேரிடர்களை சமாளிக்கும் வகையில் கோயில் உருவாகி வருகிறது.  இந்த கட்டுமானத்தில் இரும்பு பயன்படுத்தப்படாது. பாறைகளை இணைக்க செம்பு தகடுகள் மட்டுமே பயன்படுத்தப்பட உள்ளன. தகடுகளை பக்தர்கள் தானமாக அளித்து வருகின்றனர்.
  Published by:Vinothini Aandisamy
  First published: