நாட்டின் 72ஆவது குடியரசு தினவிழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அதில், மாநிலங்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு இடம்பெற்றது.
அதன்படி டெல்லியில், தமிழகத்தின் சார்பில் மகாபலிபுரம் சிற்பங்களின் மாதிரியுடன் அலங்கார ஊர்தி இடம்பெற்றது.
அதேபோல, உத்தரபிரதேச மாநில ஊர்தியில் அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயில் மாதிரி இடம்பெற்றது. ராமர் கோயில் ஊர்தி வரும்போது அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் எழுந்து நின்று கைத்தட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கொரோனா தடுப்பூசி அலங்கார ஊர்தி
இந்நிலையில், அந்த அணிவகுப்பின் இறுதியில் கொரோன வைரஸை கட்டுப் படுத்தும் அரசின் நடவடிக்கையை எடுத்துக் காட்டும் நோக்கில் கொரோனா தடுப்பூசி அலங்கார ஊர்தியும் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.