ஹோம் /நியூஸ் /இந்தியா /

"ராமர் ஹிந்துக்களுக்கு மட்டுமான கடவுள் இல்லை.. அவர் பொதுவானவர்" - ஃபரூக் அப்துல்லா

"ராமர் ஹிந்துக்களுக்கு மட்டுமான கடவுள் இல்லை.. அவர் பொதுவானவர்" - ஃபரூக் அப்துல்லா

ஃபரூக் அப்துல்லா

ஃபரூக் அப்துல்லா

எந்த மதமும் கெட்ட மதம் அல்ல என்று பேசிய அவர், தீய மனிதர்கள் தான் மதங்களை சீரழிப்பதாகவும் கூறினார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Jammu and Kashmir, India

  இந்து மதத்தினருக்கு மட்டுமின்றி கடவுள் ராமர் அனைவருக்கும் உரியவர் என்று தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா கூறியுள்ளார்.

  ஜம்மு-காஷ்மீர் அக்னூரில் நடைபெற்ற கூட்டத்தில்  காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் ஃபரூக் அப்துல்லா பேசினார். அதில், வேலையில்லா திண்டாட்டம் காஷ்மீரில் அதிகரித்து இருப்பதாக விமர்சித்தார். மேலும் தாங்கள் எப்போதும் பாகிஸ்தான் உடன் கைகோர்த்ததில்லை என்று கூறிய அப்துல்லா, ஜின்னா கூறியும் தனது தந்தை பாகிஸ்தானுடன் இணைந்து செயல்படவில்லை என்றார்.

  எந்த மதமும் கெட்ட மதம் அல்ல என்று பேசிய அவர், தீய மனிதர்கள் தான் மதங்களை சீரழிப்பதாகவும் கூறினார். ஜம்மு-காஷ்மீருக்கு உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் ஃபரூக் அப்துல்லா வலியுறுத்தினார். மேலும் ராமர் ஹிந்துக்களுக்கான கடவுள் மட்டும் இல்லை எனவும் அவர் அனைவருக்கும் பொதுவானவர் எனவும் தெரிவித்தார்.

  Published by:Siddharthan Ashokan
  First published:

  Tags: Jammu and Kashmir