ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவின் மூலம் பொன்னான அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளோம் - பிரதமர் மோடி பெருமிதம்

ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டுவதன் மூலம் இந்தியா பொன்னான அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளதாகவும் உலகம் முழுவதும் ஜெய் ஸ்ரீராம் முழக்கம் எதிரொலிப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவின் மூலம் பொன்னான அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளோம் - பிரதமர் மோடி பெருமிதம்
பிரதமர் நரேந்திர மோடி.
  • Share this:
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டிய பிரதமர் நரேந்திர மோடி, ஜெய் ஸ்ரீராம் என்ற முழக்கத்தின் இடையே உரையாற்றத் தொடங்கினார். அப்போது ஜெய் ஸ்ரீராம் என்ற முழக்கம் உலகம் முழுக்க எதிரொலிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

வரலாற்றில் இன்று மிக முக்கியமான நாள், கன்னியாகுமரி முதல் ஷர்பவணி வரை, கோட்டேஷ்வர் முதல் காமக்யா வரை, ஜெகன்நாத் முதல் கேதர்நாத் வரை, சோம்நாத் முதல் காஷி விஸ்வநாத் வரை நாடு முழுவதும் இன்று ராம நாமத்தில் மூழ்கியுள்ளது. ராம பக்தர்கள், இந்திய குடிமக்கள் மற்றும் உலகம் முழுவதும் வசிக்கும் இந்தியர்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துகள் என பிரதமர் தெரிவித்தார். இவ்வளவு காலமாக கூடாரத்தில் இருந்த ராமருக்கு, பிரமாண்ட கோயில் அமைய உள்ளதாகவும் அவர் கூறினார்.

ராமஜென்ம பூமிக்கான தடைகள் அனைத்தும் தகர்க்கப்பட்டு தற்போது கட்டப்படும் கோயில் நூற்றாண்டுகள் கடந்தும் நிற்கும் என்றும் அவர் தெரிவித்தார். இந்தியர்களின் தியாகம் மற்றும் போராட்டம் காரணமாக ராமர் கோயில் என்ற கனவு நனவாகியுள்ளதாகவும் அவர் கூறினார். பல்லாண்டு கால போராட்டங்களுக்கு முடிவு கிடைத்துள்ளதாகவும், ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழாவின் மூலம் பொன்னான அத்தியாயத்தை இந்தியா தொடங்கியுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.


Also read: 10% இடஒதுக்கீடு தொடர்பான வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு

பல நூற்றாண்டுகளாக எதிர்பார்த்திருந்த நிகழ்வு இன்று நிறைவேறி உள்ளது. இது மிகவும் உணர்வு பூர்வமான தருணம். நமது கலாச்சாரத்தின் நவீன சின்னமாக ராமர் கோவில் விளங்கப் போகிறது. அன்பு, உண்மை, அர்ப்பணிப்பு ஆகியவற்றை அயோத்தி கற்றுத் தரப் போகிறது. இதற்காக உழைத்த, தியாகம் செய்தவர்களுக்கு நன்றி.

சமூக நல்லிணக்கமே ராம ராஜ்யத்தின் முக்கிய கொள்கை என்றும், நாட்டை ஒருங்கிணைக்கும் கருவியாக ராமர் கோயில் கட்டுமானப்பணி அமைந்துள்ளதாகவும் அவர் கூறினார். கடவுள் ராமரை அழிப்பதற்கான பல்வேறு முயற்சிகள் நடைபெற்ற போதும், நமது உள்ளங்களில் அவர் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.அயோத்தியில் அமைய உள்ள ராமர் கோயில், இந்திய கலாச்சாரத்தின் உயரிய பாரம்பரியத்தை வெளிப்படுத்துவதாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். அயோத்தி ராமர் கோயில் ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் ஈர்க்கும் என்றும் அவர் கூறினார். தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ராமாயணம் எழுதப்பட்டுள்ளதை குறிப்பிட்ட பிரதமர் மோடி, பல்வேறு வேற்றுமைகளிடையே இந்தியாவை ஒருங்கிணைத்து கோர்க்கும் நூலாக ராமர் உள்ளதாகவும் கூறினார்.

அதிகளவிலான இஸ்லாமியர்களைக் கொண்ட இந்தோனேசியாவில் தனியான ராமாயணம் உள்ளதாகவும், சீனா மற்றும் ஈரானிலும் ராமாயணத்தைக் காண முடிவதாகவும் அவர் தெரிவித்தார்.
First published: August 5, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading