• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ரக்ஷா பந்தன்: பாம்புக்கு ராக்கி கயிறு கட்ட முயன்றவருக்கு நேர்ந்த பரிதாபம்.. அதிர்ச்சி வீடியோ!!

ரக்ஷா பந்தன்: பாம்புக்கு ராக்கி கயிறு கட்ட முயன்றவருக்கு நேர்ந்த பரிதாபம்.. அதிர்ச்சி வீடியோ!!

 ரக்ஷா பந்தன்: பாம்புக்கு ராக்கி கயிறு கட்ட முயன்றவருக்கு நேர்ந்த பரிதாபம்..  அதிர்ச்சி வீடியோ!!

ரக்ஷா பந்தன்: பாம்புக்கு ராக்கி கயிறு கட்ட முயன்றவருக்கு நேர்ந்த பரிதாபம்.. அதிர்ச்சி வீடியோ!!

ரக்ஷா பந்தன் தினத்தன்று, பாம்புக்கு ராக்கி கயிறு கட்ட முயன்ற பாம்பாட்டி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  • Share this:
    சகோதரப் பந்தத்தை போற்றும் வகையில், நாடு முழுவதும் ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சகோதரர்கள் கையில் சகோதரிகள் ராக்கி கயிறை கட்டி தங்களது சகோதரப் பந்தத்தை வெளிப்படுத்துவது வழக்கம்.

    Also read: காதலிக்காக பெண் வேடமணிந்து தேர்வு எழுதி மாட்டிய காதலன் - அடுத்து நடந்தது என்ன?

    அந்த வகையில், ரக்ஷா பந்தனை முன்னிட்டு, நேற்றைய தினம் பீகார் மாநிலத்தில் பாம்பாட்டி ஒருவர் இரண்டு பாம்புகளுக்கு ராக்கி கயிறு கட்ட முயன்ற போது, அதில் ஒரு பாம்பு, அவரின் காலில் கடித்துள்ளது. இதில், அந்த நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

    இதுதொடர்பாக சமூகவலைதளங்களில் வைரலாக பரவும் வீடியோவில், அந்த பாம்பாட்டி தனது கையில் இரண்டு பாம்புகளின் வாலை பிடித்து வைத்திருக்கிறார். அந்த பாம்புகளுக்கு குங்குமம் வைத்தபடி இருக்கிறார். அப்போது, ஒரு பாம்பு திடீரென பாம்பாட்டியின் காலில் கடித்து விடுகிறது.



    இதனால், சிறுது பதறிய அவர், பாம்புகளை விடாமல், கையில் தூக்கி பிடிக்கிறார். தொடர்ந்து, தனது கால்களை பார்த்த படி, பாம்புகளை தூக்கிக்கொண்டு செல்கிறார். இதனை சுற்றி இருப்பவர்கள் அனைவரும் பீதியில் பார்த்தபடி இருக்கின்றனர்.

    தொடர்ந்து, அந்த பாம்பாட்டியை மருத்துவமனை அழைத்து சென்றுள்ளனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    பாம்புகளின் மீது அதிக நாட்டம் கொண்ட அந்த நபர், பாம்பு கடித்தவர்களை குணப்படுத்தியும் வந்துள்ளார். இப்படி பாம்பின் மீது அதிக ஆர்வம் கொண்ட அவர், ரக்ஷா பந்தன் தினத்தில் பாம்புகளுக்கு ராக்கி கயிறு கட்ட விரும்பியுள்ளார். ஆனால், அதுவே அவரது உயிரை பறிக்கும் அளவு சோகமான சம்பவமாக மாறியுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: