Home /News /national /

விவசாயிகள் பயிர்களுக்கு உரியவிலையின்றித் தவிக்கின்றனர், ஜின்னா, பாகிஸ்தான் என்று பேசி வருகிறார்கள்- பாஜக மீது விவசாய அமைப்புத் தலைவர் தாக்கு

விவசாயிகள் பயிர்களுக்கு உரியவிலையின்றித் தவிக்கின்றனர், ஜின்னா, பாகிஸ்தான் என்று பேசி வருகிறார்கள்- பாஜக மீது விவசாய அமைப்புத் தலைவர் தாக்கு

ராகேஷ் திகாயத்

ராகேஷ் திகாயத்

உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இவை தொடர்பான விவாதம் இந்தி தொலைக்காட்சி ஒன்றில் நடந்த போது ராமர் கோயில் படம் இடம்பெற்றிருந்ததால் பாரத் கிசான் விவசாய அமைப்புத் தலைவர் ராகேஷ் திகாயத்.

மேலும் படிக்கவும் ...

    விவசாயிகளின் முதல்வர் யார்? எனும் தலைப்பிலான அந்த விவாத மேடையின் பின்னணியில் ராமர் கோயில் படம் இடம் பெற்றிருந்தது குறித்து திகாயத் தன் எதிர்ப்பைக் காட்ட வெளியேறினார்.

    இதோடு விடாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளரிடம், “ராமர் கோயில் படம் இங்கு காண்பிக்கப்படுவது ஏன்? யார் கூறியதன் பேரில் இப்படம் இங்கு காட்டப்படுகிறது? நீங்கள் ஏன் இதை விளம்பரப்படுத்துகிறீர்கள்? உங்கள் தொலைக்காட்சி மத துவேஷத்தை கிளப்ப முயல்கிறது. பாபர் மசூதி-ராமர் கோயில் போன்ற படங்களுக்கு பதிலாக ஒரு மருத்துவமனையின் படத்தைக் காட்டலாமே?” என்று கேள்விகளை எழுப்பினார்.

    இவரது கேள்விக்கு நெறியாளர் விளக்கம் அளித்தார் ஆனால் அதில் திருப்தி அளிக்காததால் விவாதத்திலிருந்து வெளியேறினார் திகாயத். மதநல்லிணக்கத்துக்கு குந்தகம் விளைவிப்பதாக உ.பி. தேர்தல் பிரச்சாரத்தை பாஜக முன்னெடுக்கிறது என்று குற்றம் சாட்டிய திகாயத், “உபி தேர்தலில் விவசாயிகள் பிரச்சினையும், வளர்ச்சித் திட்டங்கள் பற்றியும் பேசப்பட வேண்டும். இதை விடுத்து, முகம்மது அலி ஜின்னா, பாகிஸ்தான் என்றெல்லாம் பேசி, இந்து-முஸ்லிம்களை பிரிக்கும் வகையில் பிரச்சாரம் செய்யப்படுகிறது.

    Also Read: WI vs ENG: 4 பந்துகளில் 4 விக்கெட்: ஜேசன் ஹோல்டர் உலக சாதனை- டி20 தொடரை வென்றது மே.இ.தீவுகள்

     தங்கள் பயிர்களுக்கு உரிய விலையின்றி மின்சாரக் கட்டணம் செலுத்த முடியாமல் விவசாயிகள் அவதிக்குள்ளாகின்றனர். இளைஞர்கள் வேலை கிடைக்காமல் தவிக்கின்றனர். இவற்றை எல்லாம் பேசாமல், மத நல்லிணக்கத்தை குலைக்கும் வகையில் பிரச்சாரம் செய்யும் கட்சிகளுக்கு இந்த தேர்தலில் வெற்றி கிடைக்காது.”

    என்று கூறினார் திகாயத். இந்தத் தேர்தலில் எந்தக் கட்சிக்கு ஆதரவாகவும் பிரச்சாரம் செய்ய மாட்டோம் என்று கூறியுள்ளார் திகாயத்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: Farmers, Farmers Protest, Uttar pradesh

    அடுத்த செய்தி