அன்று டெல்லி போலீஸ் கான்ஸ்டபிள், இன்று விவசாயப் போராட்டத்தில் முன்னிலை- 44 முறை சிறை சென்ற ராகேஷ் திக்கைத்

ராகேஷ் சிங் திக்கைத்.

குடியரசுத் தினத்தன்று நடந்த விவசாயிகளின் டிராக்டர் பேரணி வன்முறை தொடர்பாக இந்த ராகேஷ் திக்கைத் இரண்டுக்கும் மேற்பட்ட போலீஸ் எஃப்.ஐ.ஆர். இல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

 • Share this:
  டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து நடைபெற்றுவரும் போராட்டத்தில் பாரத் கிசான் யூனியனைச் சேர்ந்த ராகேஷ் சிங் திக்கைத் முன்னிலை வகிக்கிறார், ஆனால் இவர் ஒருகாலத்தில் டெல்லி போலீஸில் கான்ஸ்டபிளாக இருந்தவர், விவசாயிகளுக்காக போராடி 44 முறை சிறை சென்றவர்.

  குடியரசுத் தினத்தன்று நடந்த விவசாயிகளின் டிராக்டர் பேரணி வன்முறை தொடர்பாக இந்த ராகேஷ் திக்கைத் இரண்டுக்கும் மேற்பட்ட போலீஸ் எஃப்.ஐ.ஆர். இல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

  இவரைப்பற்றி கூறும் பாரத் கிசான் யூனியன் தலைவர் அவர் இதற்கெல்லாம் அஞ்சி போராட்டத்தை விடமாட்டார் என்றார்.

  ராகேஷ் சிங் திக்கைத் ஜூன் 4ம் தேதி 1969ம் ஆண்டு முசாபர்நகர் மாவட்டத்தில் பிறந்தார். இவரது தந்தை மகேந்திர சிங் திக்கைத், இவர் இந்திய விவசாயிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  உத்தரப் பிரதேச மாநில ஷாம்லி மாவட்டத்தில் தந்தை மகேந்திர சிங் திக்கைத் இந்திய விவசாயிகள் சங்கத்தை 1987-ம் ஆண்டு தொடங்கியதாகக் கூறப்படுகிறது.

  தந்தை மகேந்திர சிங் திக்கைத் விவசாயிகளுக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர் என்றால் மகன் ராகேஷ் சிங் திக்கைத் எல்.எல்.பி. படித்தார்ர். 1985-ல் டெல்லி போலீஸில் கான்ஸ்டபிளாகப் பணியாற்றத் தொடங்கினார்.

  1990-களில் கான்ஸ்டம்பிள் வேலையை ராஜினாமா செய்து விட்டு விவசாயிகள் சங்கத்தில் சேர்ந்தார். அப்போது முதலே அவர் விவசாயிகளுக்காகப் போராடி வருகிறார். இவரது தந்தை மகேந்திர சிங் மறைந்தவுடன் ராகேஷ் சிங் தைக்கத் இந்திய விவசாய சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஆனார். நரேஷ் திக்கைத் தலைவரானார்.

  விவசாயிகளுக்கான போராட்டத்தில் ராகேஷ் திக்கைத் 44 முறை சிறை சென்றுள்ளார். ஒருமுறை மத்தியப் பிரதேசத்தில் 39 நாட்கள் சிறையில் கழிக்க நேரிட்டது என்று நரேஷ் திக்கைத் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார். கரும்பு விவசாயிகளின் ஆதார விலையை உயர்த்தக் கோரி நாடாளுமன்றம் அருகே போராடிய ராகேஷ் திக்கைத் திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.

  ஆனால் 2007-ல் ஒருமுறை 2014-ல் ஒருமுறை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி கண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Muthukumar
  First published: