கொரோனா தடுப்பூசி திட்டத்தை டீமானிடைசேஷனுடன் ஒப்பிட்ட ராகுல் காந்தி - ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் பதிலடி!

கொரோனா தடுப்பூசி திட்டத்தை டீமானிடைசேஷனுடன் ஒப்பிட்ட ராகுல் காந்தி - ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் பதிலடி!

ராஜ்யவர்தன் சிங் ரத்தோர்

மத்திய அரசின் கொரோனா தடுப்பூசி திட்டம் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ஒப்பானது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

  • Share this:
இந்தியாவில் கொரோனா 2ம் அலை உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்திக்கு நேற்று கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் தற்போது வீட்டுத் தனிமையில் இருந்து வருகிறார். இந்நிலையில் மத்திய அரசின் கொரோனா தடுப்பூசி திட்டத்தை, 5 ஆண்டுகளுக்கு முன்னர் மத்திய அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையுடன் அவர் ஒப்பிட்டு பேசியுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில், “மத்திய அரசின் கொரோனா தடுப்பூசி திட்டம், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எந்த வகையிலும் குறைவு கிடையாது. மக்கள் மீண்டும் வரிசைகளின் நிற்பதை பார்ப்போம். அவர்களின் பணம், சுகாதாரம் மற்றும் வாழ்க்கை தொலைவதை பார்க்க இருக்கிறோம். இறுதியாக சில தொழிலதிபர்கள் மட்டுமே இதனால் பயனடைவார்கள்” என இந்தியில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.2016ம் ஆண்டு கருப்பு பணத்தை ஒழிக்கும் வகையில் பிரதமர் மோடி நாட்டில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டார். அப்போது 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. பழைய ரூபாய் நோட்டுக்களுக்கு பதிலாக புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக மக்கள் வங்கிகளிலும், ஏடிஎம்களிலும் திரண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவிஷீல்ட் தடுப்பூசி விலை 2 மடங்கு உயர்வு - சீரம் நிறுவனம் அறிவிப்பு

 

இதனிடையே தடுப்பூசி குறித்த ராகுல் காந்தியின் விமர்சனத்திற்கு மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் பதிலடி தந்துள்ளார். ஏஎன்ஐ நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “இது போன்ற நெருக்கடியான நேரத்தில் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் இது போன்ற கருத்துக்களை வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.நீங்கள் தனியார் நிறுவனங்கள் மீது பழி போடுகிறீர்கள், அந்நிறுவனங்கள் கொரோனாவிற்கு எதிரான போரில் ஒரு அங்கமாக செயல்பட்டுக்கொண்டிருகின்றன. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அவர்களின் குடும்பத்தினர் மற்றும் காங்கிரஸ் கட்சியை தவிர்த்து நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் கொரோனாவுக்கு எதிரான போரில் ஒரு அங்கமாக இருக்கின்றனர்.

முன்னதாக, மத்திய அரசின் தடுப்பூசி கொள்கை பாரபட்சமானது என்றும் பொருளாதார ரீத்யில் பின் தங்கிய பிரிவினருக்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்றும் ராகுல் காந்தி குற்றம்சாடியிருந்தார்.

ராகுல் காந்தி


கடந்த ஜனவரி முதல் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளை மத்திய அரசு தொடங்கியது. முதலில் சுகாதார மற்றும் முன்கள பணியாளர்களுக்கும், அதன் பின்னர் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், அதன் பின்னர் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் என 3வது கட்டமாக தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே வரும் மே ஒன்றாம் தேதி முதல் நாடு முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட தகுதியானவர்கள் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

 
Published by:Arun
First published: