நாடாளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்படும் மாதாந்திர ஊதியத்தை விவசாய குடும்பங்களின் முன்னேற்றத்திற்கு அளிப்பேன் என்று மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி மொத்தம் உள்ள 117 தொகுதிகளில் 92 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. இந்த வகையில் ஆம் ஆத்மி கட்சிக்கு 5 மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைத்துள்ளன. இவற்றில் ஒன்று முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிற்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பதிவுகளில் கூறியிருப்பதாவது-
மாநிலங்களவை உறுப்பினர் என்கிற முறையில் எனக்கு அளிக்கப்படும் ஊதியத்தை விவசாயிகளுடைய பிள்ளைகளின் கல்விக்கும், அவர்களது நல்வாழ்விற்கும் அளிக்க உள்ளேன். நாட்டின் மேம்பாட்டிற்காக உழைப்பதற்கு நான் நாடாளுமன்றத்தில் இடம் பெறுகிறேன்.
இதையும் படிங்க - ஆர்எஸ்எஸ் தலைவர் வெட்டிக் கொலை... 24 மணி நேரத்தில் 2-வது கொலையால் கேரளாவில் பரபரப்பு
என்னால் முடிந்த அளவுக்கு என்ன செய்ய முடியுமோ அவற்றை நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் செய்வேன். நாட்டில் விளையாட்டை ஊக்கப்படுத்துவதற்கு நான் முக்கியத்துவம் அளிப்பேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க - காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு... 2024 தேர்தல் குறித்து ஆலோசனை
இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்றிருந்த ஹர்பஜன் சிங் அணிக்காக பல முறை வெற்றியை தேடித் தந்துள்ளார். வலது கை சுழற் பந்து வீச்சாளரான அவர், பேட்டிங்கிலும் கலக்கி ஆல்ரவுண்டராக வலம் வந்தார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பல்வேறு அணியில் இடம் பெற்றிருந்த ஹர்பஜன், நடிகராக தமிழ் சினிமாவில் ஃப்ரெண்ட்ஷிப் என்ற படத்தில் அறிமுகமானார். ஆனால் இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை அவருக்கு தரவில்லை.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.