வேளாண் மசோதாக்களை நிறைவேற்ற இன்று கூடுகிறது ராஜ்ய சபா- பா.ஜ.கவுக்கு இருக்கும் சவால்கள் என்ன?

வேளான் தொடர்பான மூன்று மசோதாக்களை நிறைவேற்றுவதற்காக ஞாயிற்றுக்கிழமையான இன்று மாநிலங்களவை கூட உள்ளது.

வேளாண் மசோதாக்களை நிறைவேற்ற இன்று கூடுகிறது ராஜ்ய சபா- பா.ஜ.கவுக்கு இருக்கும் சவால்கள் என்ன?
கோப்பு படம்
  • News18 Tamil
  • Last Updated: September 20, 2020, 8:27 AM IST
  • Share this:
வேளான் தொடர்பாக மூன்று சட்டங்களை இயற்றுவதற்கு மத்திய பா.ஜ.க தீவிர முனைப்பு காட்டிவருகிறது. முன்னதாக, விவசாயம் தொடர்பான மூன்று மசோதாக்களுக்கு கடந்த ஜூன் மாதம் 5ஆம் தேதியன்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அந்த மூன்று மசோதாக்களும் மக்களவையில் நடப்புக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த வேளான் சட்டங்களுக்கு பஞ்சாப், ஹரியானா உள்ளிட்டட மாநிலங்களில் விவசாயிகள் மிகக் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். பஞ்சாப் மக்களின் எதிர்ப்பு காரணமாக, ஷிரோன்மணி அகாலிதளம் கட்சியைச் சேர்ந்த ஹர்சிம்ரத் கவுர் பாதல், மத்திய அமைச்சரவையிலிருந்து விலகியுள்ளார். அதனையடுத்து, வேளான் சட்டங்கள் தொடர்பாக நாடு முழுவதும் விவாதங்கள் எழுந்துள்ளன. விவசாயிகள் உற்பத்தி வணிகம் மற்றும் வர்த்தகம் 2020, விலை நிர்ணயம் மீதான விவசாயிகள் ஒப்புதல் 2020, அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம் 2020 இந்த மூன்று சட்டங்களும் ஏற்கெனவே மக்களவையில் நிறைவேற்றப்பட்டுவிட்டன.

இந்தநிலையில், மாநிலங்களவையில் இந்த மூன்று சட்டங்களையும் நிறைவேற்றுவதற்கு பா.ஜ.க முனைப்பு காட்டிவருகிறது. அதனால், ஞாயிற்று கிழமையான இன்று மாநிலங்களவை கூடுகிறது. பா.ஜ.க எம்.பிக்கள் அனைவரும் மாநிலங்களவைக்கு வரவேண்டும் என்று கட்சி கொறடா உத்தரவிட்டுள்ளார்.

மக்களவையில் பா.ஜ.கவுக்கு தனிப்பெரும்பான்மை உள்ள நிலையில், மாநிலங்களவையில் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவைப் பெறவேண்டிய அவசியம் உள்ளது. மொத்தமுள்ள 245 உறுபிப்பினர்கள் பா.ஜ.க 123 எம்.பிகளின் ஆதரவைப் பெறவேண்டிய அவசியம் உள்ளது.


அ.தி.மு.கவின் 9 எம்.பிக்கள், ஒ.எஸ்.ஆர் காங்கிரஸ் 6 எம்.பிகளின் ஆதரவுடன் பெரும்பான்மையைப் பெறுவோம் என்று பா.ஜ.கவினர் நம்பிக்கைத் தெரிவித்துவருகின்றனர்.
First published: September 20, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading