Home /News /national /

மாநிலங்களவைத் தேர்தலில் 16 இடங்களுக்கு கடும் போட்டி.. களைகட்டும் "கூவத்தூர் பாணி"

மாநிலங்களவைத் தேர்தலில் 16 இடங்களுக்கு கடும் போட்டி.. களைகட்டும் "கூவத்தூர் பாணி"

மாநிலங்களவைத் தேர்தலில் 16 இடங்களுக்கு கடும் போட்டி.. களைகட்டும் "கூவத்தூர் பாணி"

மாநிலங்களவைத் தேர்தலில் 16 இடங்களுக்கு கடும் போட்டி.. களைகட்டும் "கூவத்தூர் பாணி"

தங்கள் கட்சி எம்எல்ஏக்கள் விலை போய்விடகூடாது என்பதில் கவனம் செலுத்தி வரும் கட்சிகள், அவர்களை தனிமைப்படுத்தி வருகின்றன.

    இந்தியா முழுவதும் காலியாக உள்ள 57 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளில் தமிழ் நாடு உள்ளிட்ட மாநிலங்களில் 41 பேர் போட்டியின்றி தேர்வாகி உள்ளனர். அதேநேரம், ராஜஸ்தான், கர்நாடகா, மகாராஷ்டிரா, மாநிலங்களில் தேர்தல் நடக்க உள்ளது.

    மகாராஷ்டிராவில் உள்ள 6 இடங்களுக்கு 7 பேர் போட்டியிடுவதால் 22 ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் ஒரு வேட்பாளர் வெற்றி பெற 42 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. பாஜகவுக்கு 105 எம்எல்ஏக்கள் உள்ளனர். சிவசேனாவுக்கு 55, தேசியவாத காங்கிரஸ் 54, காங்கிரசுக்கு 42 என எம்எல்ஏக்களின் எண்ணிக்கை உள்ளது.

    இது தவிர சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 29 எம்எல்ஏக்கள் உள்ளனர். பாஜகவிற்கு இரண்டு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வான பின்னர், 29 எம்எல்ஏக்கள் மீதமிருப்பர். எனவே 3-வது இடத்தை சிறிய கட்சிகளின் ஆதரவுடன் வெல்ல பாஜக திட்டமிட்டுள்ளது.

    இதுபோல காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா தலா ஒரு எம்.பி.க்கள் பெற்ற பிறகு அந்த கூட்டணியில் 27 எம்எல்ஏக்கள் உள்ளனர். எனவே அந்த அணியும் சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சை எம்எல்ஏக்களின் ஆதரவுடன் 4-வது இடத்தை வெல்ல திட்டமிட்டுள்ளது.

    Read More : பேருந்தில் பெண் பயணியை அவமரியாதையாக நடத்திய ஓட்டுனர், நடத்துனர் தற்காலிக பணி நீக்கம்

    தங்கள் கட்சி எம்எல்ஏக்கள் விலை போய்விடகூடாது என்பதில் கவனம் செலுத்தி வரும் கட்சிகள், அவர்களை தனிமைப்படுத்தி வருகின்றன. சிவசேனா கட்சியினர் மும்பையில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். பாஜக எம்எல்ஏக்கள் உடனடியாக மும்பை திரும்ப உத்தரவிடப்பட்டுள்ளது.

    ராஜஸ்தானில், பாஜக ஆதரவுடன் தேர்தலில் போட்டியிடும் ஊடக முதலாளி, சுபாஷ் சந்திரா தனக்கு ஏற்கெனவே 4 காங்கிரஸ் எம்எல்ஏகள் வாக்களிக்க உள்ளதாகவும், மேலும் 8 பேர் கட்சியை மீறி வாக்களிப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார். குதிரை பேரத்தை தடுக்க காங்கிரஸ் கட்சி தனது எம்எல்ஏக்களை கடந்த 2- ஆம் தேதி முதல் ஜெய்பூரில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்க வைத்துள்ளது.

    கர்நாடகாவில் மொத்தமுள்ள 4 இடங்களுக்கு 6 பேர் போட்டியிடுகின்றனர். 4-வது உறுப்பினருக்கு வெற்றி பெற வாய்ப்பில்லாத போதும் பாஜக, காங்கிரஸ், ஜனதா தளம் ஆகிய 3 கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.

    மொத்தம் 245 உறுப்பினர்கள் கொண்ட மாநிலங்களவையில் பாஜகவிற்கு 100 உறுப்பினர்கள் உள்ளனர். முப்பது வருடங்களில் நூறு உறுப்பினர்களைக் கொண்ட ஒரே கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது. 1990-ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி மாநிலங்களவையில் 108 உறுப்பினர்களைக் கொண்டிருந்தது.

    இந்தநிலையில் சத்தீஸ்கர், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பாஜகவுக்கு எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது. இதனால் 32 ஆண்டுகளுக்கு பிறகு பெற்ற 100 என்ற சாதனை பறிபோகும் சூழல் உருவாகி உள்ளது.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Rajya Sabha Election

    அடுத்த செய்தி