6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல்... வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்...!

தேர்தல் நடத்தும் அதிகாரியாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனும், உதவி தேர்தல் அதிகாரியாக கூடுதல் செயலாளர் சுப்பிரமணியமும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Web Desk | news18
Updated: July 1, 2019, 9:56 AM IST
6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல்... வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்...!
நாடாளுமன்றம்
Web Desk | news18
Updated: July 1, 2019, 9:56 AM IST
தமிழகத்தில் இருந்து 6 மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது.

கடந்த 2013-ம் ஆண்டு தமிழகத்தில் இருந்து 6 பேர் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் மைத்ரேயன், அர்ஜூனன், ஆர்.லட்சுமணன் மற்றும் ரத்னவேல் ஆகியோர் அதிமுக சார்பிலும், கனமொழி திமுக சார்பிலும், டி.ராஜா இந்திய கம்யூனிஸ்ட் சார்பிலும் தேர்வு செய்யப்பட்டனர்.

இவர்களில் கனிமொழி மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றதால் தனது ராஜ்யசபா எம்பி பதவியை ராஜினாமா செய்தார். மற்ற 5 பேர்களின் பதவிக்காலம் வரும் 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதற்கான தேர்தல் வரும் 18-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில், இதற்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது. வேட்பு மனுக்கள் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 8-ம் தேதி.  ஜூலை 9 -ம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலணை நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி தேதி ஜூலை 11-ம் தேதி.

கட்சிகள் சார்பில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையில் அடிப்படையில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட உள்ளதால் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார்கள். எனினும் தேர்தல் நடைபெற தேவை ஏற்படும் பட்சத்தில் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை சட்டப்பேரவை செயலகம் மேற்கொண்டுள்ளது.

தேர்தல் நடத்தும் அதிகாரியாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனும், உதவி தேர்தல் அதிகாரியாக கூடுதல் செயலாளர் சுப்பிரமணியமும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க... இந்தியாவில் 2 லட்சம் பேர் செல்வது இதுவே முதல்முறை - ஹஜ் அசோசியேசன் தலைவர்

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 1, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...