Home /News /national /

அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்... எம்.பிக்கள் கோரிக்கை!

அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்... எம்.பிக்கள் கோரிக்கை!

மாநிலங்களவை

மாநிலங்களவை

இந்தியாவின் மருந்துப் பொருள்களின் விலைகளை ஒழுங்குமுறைப்படுத்தும் தேசிய மருந்துப் பொருள்கள் விலை ஆணையம் 800 மருந்துகளின் மொத்த விலையை 10.7 சதவீதம் உயா்த்த அனுமதி அளித்தது.

    அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    கொரோனா, நீரிழிவு, உயா் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்காகப் பயன்படுத்தப்படும் 800க்கும் மேற்பட்ட மருந்துகளின் விலை வெள்ளிக்கிழமை (ஏப்.1) முதல் 10.7 வரை சதவீதம் உயர்ந்துள்ளது.

    இந்நிலையில், நாடாளுமன்றத்தில் இன்று பூஜ்ய நேரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. ஜான் பிரிட்டாஸ், அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வுக் குறித்து கேள்வி எழுப்பினார். ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 800-க்கும் மேற்பட்ட மருந்துகளின் விலை 10.7 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இது ஏழை மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், அதைத் திரும்பப் பெறுமாறு மத்திய அரசை வலியுறுத்தினார்.

    இதையும் படிங்க - 'மது குடிப்பவர்கள் இந்தியர்களே கிடையாது; அவர்கள் மகா அயோக்கியர்கள்' - நிதிஷ் குமார் கடும் தாக்கு

    கடந்த காலங்களில் மருந்துகளின் விலையில் இவ்வளவு கடுமையான உயர்வு இருந்ததில்லை என்றும், முழு நாடும் சுகாதார அவசரநிலையை கடந்து வரும் போது, எந்த ஒரு உணர்ச்சிகரமான அரசாங்கமும் இதைத் தவிர்த்திருக்க வேண்டும். ஆனால், இந்த அரசு மக்கள் மீது ஒரு மோசமான உணர்வின்மையை காட்டுவதாக அவர் குற்றம்சாட்டினார்.

    சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதியும் அத்தியாவசிய மருந்துகளின் விலையை திரும்பப் பெற வலியுறுத்தினார். ஏற்கனவே விலைவாசி உயர்வால் மக்கள் தத்தளித்து வரும் நிலையில், ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலையும் உயர்ந்து வருகிறது என்று கூறினார்.

    இந்தியாவின் மருந்துப் பொருள்களின் விலைகளை ஒழுங்குமுறைப்படுத்தும் தேசிய மருந்துப் பொருள்கள் விலை ஆணையம் 800 மருந்துகளின் மொத்த விலையை 10.7 சதவீதம் உயா்த்த அனுமதி அளித்தது.

    இதய அறுவை சிகிச்சையில் வைக்கப்படும் ‘ஸ்டென்ட்’, மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் வைக்கப்படும் உலோகப் பொருள்களின் விலையும் உயருகிறது.

    தற்போது விலை உயா்வுக்கு உள்ளான மருந்துகள் மொத்த மருந்துச் சந்தையில் 18 சதவீதமாகும். இதன் சந்தை மதிப்பு ரூ.1.5 டிரில்லியனாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
    Published by:Esakki Raja
    First published:

    அடுத்த செய்தி