Home /News /national /

Headlines Today : 16 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு... - தலைப்புச் செய்திகள் (ஜூன் 10, 2022)

Headlines Today : 16 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு... - தலைப்புச் செய்திகள் (ஜூன் 10, 2022)

ராஜ்ய சபா

ராஜ்ய சபா

Headlines Today : 4 மாநிலங்களில் இன்று மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், குதிரை பேரத்தை தடுக்க எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

  4 மாநிலங்களில் காலியாக உள்ள 16 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடத்திற்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

  புதிய குடியரசுத்தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

  தமிழ்நாட்டில் அனைத்து ஊராட்சிகளுக்கும் இணையதள சேவையை அளிக்கும் வகையில், பாரத் நெட் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

  அடுத்தடுத்து முகூர்த்த நாட்கள் வருவதால், மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் ஒரு கிலோ மல்லிகைப்பூ 1,200 ரூபாய்க்கு விற்பனை .

  உலகின் சிறந்த 50 ஆராய்ச்சி கல்வி நிறுவனங்கள் பட்டியலில், சென்னைப் பல்கலைக்கழகம் 48-வது இடத்தை பிடித்து உள்ளது.

  ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு பயிற்சி மையத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், விடுதி மாணவ-மாணவியர் சொந்த ஊருக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

  அரசுப்பள்ளிகளில் எல்.கே.ஜி,, யு.கே.ஜி வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி அறிவித்துள்ளார்.

  கிருஷ்ணகிரி அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை அறுத்து கொலை செய்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

  தஞ்சாவூர் அருகே மளிகைக் கடையில் மதுபானம் விற்பனை செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

  சென்னை வடபழனி முருகன் கோயிலில் வைகாசி பிரமோற்சவ திருவிழாவையொட்டி நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

  ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு எதிரான ஆதாரங்களை திரட்டும் வகையில், தமிழ்நாடு முழுவதும் 8 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

  நாடு முழுவதும் 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 7,240 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

  ஜம்மு காஷ்மீரில் ஆளில்லா விமானம் ஒன்று இந்திய எல்லைக்குள் நுழைய முயன்ற சம்பவத்தை அடுத்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

  பீகார் மாநிலத்தில் மகனின் சடலத்தை ஒப்படைக்க மருத்துவமனை ஊழியர் 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதால், பெற்றோர் வீடு வீடாகச் சென்று யாசகம் பெறும் அவலம் அரங்கேறியுள்ளது.

  இயக்குநர் விக்னேஷ் சிவன் - நடிகை நயன்தாராவின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.

  ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்க எப்போதும் தயாராக உள்ளதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

  அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவு வீழ்ச்சி அடைந்துள்ளது, ஒரு டாலருக்கு 77 ரூபாய் 81 காசுகள் என்ற அளவில் குறைந்தது.

  பாகிஸ்தானில் பாரம்பரியமாக நடைபெற்ற எருது போட்டியை ஏராளமானோர் கண்டு களித்தனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  உலகம் முழுதும் 29 நாடுகளில் 1000 பேருக்கு மேல் குரங்கம்மை பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

  சீனாவின் ஃபுஜியான் மாகாணத்தில் பெய்த கன மழையால் வீடுகள், சாலைகள் மற்றும் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கின.

  வெனிசுலா, மத்திய அமெரிக்கா, நாடுகளைச் சேர்ந்த 4000 முதல் 5000 பேர் தெற்கு மெக்சிகோ வழியாக அமெரிக்க எல்லையை அடைந்துள்ளனர்.

  Must Read : ராகுல் காந்திக்கு சம்மன்; நாடு முழுவதும் அமலாக்கத்துறையைக் கண்டித்து போராட்டம்- காங்கிரஸ் அறிவிப்பு

  இலங்கையின் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

  அண்டார்டிகாவில் புதிதாக ஏற்பட்ட பனிப்பொழிவில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளன.

  ஒருநாள் போட்டிகளில் ஆயிரம் ரன்களை விரைவாக எட்டிய கேப்டன் என்ற சாதனையை பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆஸம் படைத்துள்ளார்.
  Published by:Suresh V
  First published:

  Tags: Headlines, Today news, Top News

  அடுத்த செய்தி