மாநிலங்களவையில் காலியாக உள்ள 19 எம்.பி. இடங்களுக்கு இன்று தேர்தல்

Rajya Sabha Election 2020 | கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் ஒத்திவைக்கப்பட்ட மாநிலங்களவை தேர்தல், இன்று நடக்க உள்ளது.

மாநிலங்களவையில் காலியாக உள்ள 19 எம்.பி. இடங்களுக்கு இன்று தேர்தல்
ராஜ்யசபா
  • Share this:
ஆந்திரா மற்றும் குஜராத்திலிருந்து தலா 4 இடங்களும், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் இருந்து தலா மூன்று இடங்களும், ஜார்க்கண்டிலிருந்து இரண்டு இடங்களும், மிசோரம், மேகாலயா மற்றும் மணிப்பூரிலிருந்து தலா ஒரு இடமும் என மொத்தம் 19 மாநிலங்களவை இடங்களுக்கு தேர்தல் இன்று நடைபெறுகிறது.

காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்க உள்ள இந்த தேர்தலின் முடிவுகள் மாலை 5 மணிக்கு அறிவிக்கப்பட உள்ளன.

பிப்ரவரியில், 17 மாநிலங்களில் 55 இடங்களை நிரப்புவதற்கான தேர்தலை ஆணையம் அறிவித்தது. மார்ச் மாதத்தில், தமிழகம் உட்பட 10 மாநிலங்களில் 37 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.


மீதமுள்ள 18 இடங்களுக்கு கடந்த மார்ச் மாதம் நடைபெறுவதாக இருந்த தேர்தல், கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில், மேலும், கர்நாடகா, மிசோரம், அருணாசல பிரதேசத்திற்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், மிசோரம் தவிர மற்ற மாநிலங்களில் போட்டியின்றி எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
First published: June 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading