#BREAKING | மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு..

மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்துள்ளார்.

#BREAKING | மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு..
ஹரிவன்ஷ் நாராயணன்
  • News18 Tamil
  • Last Updated: September 22, 2020, 10:09 AM IST
  • Share this:
மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ், வேளான் மசோதாவை முன்னிட்டு மாநிலங்களவையில் கடந்த 2 நாட்களாக நடந்த சம்பவங்களால் மன உளைச்சல் அடைந்ததாக அவைத்தலைவர் வெங்கய்ய நாயுடுவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதுடன், ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தையும் அறிவித்துள்ளார்.

வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த அமளியை அடுத்து, இடைநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து 8 எம்.பிக்களும் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக தர்ணாவில் நேற்று ஈடுபட்டனர். இந்த நிலையில், இரவு முழுவதும் காந்தி சிலை முன்பே அமர்ந்த எம்.பிக்கள், தங்கள் மீதான நடவடிக்கை ரத்து செய்யப்படும் வரை இங்கிருந்து செல்ல மாட்டோம் எனவும் உறுதிபட கூறியுள்ளனர்.



தர்ணாவில் ஈடுபட்ட எம்.பிக்கள், தான் அளித்த தேநீரையும் வாங்கிக்கொள்ளாமல் தன்னை அவமதித்துவிட்டதாகவும், தான் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகவும் ஹரிவன்ஷ் தெரிவித்துள்ளார்.
First published: September 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading