25-க்கும் மேற்பட்ட எம்பிக்களுக்கு கொரோனா தொற்று... மாநிலங்களவை காலவரையின்றி ஒத்திவைப்பு

அக்டோபர் ஒன்றாம் தேதி முடிவடைய உள்ள கூட்டத்தொடரை இன்றுடன் முடித்துக் கொள்ள மத்திய அரசு திட்டமிட்டது.

25-க்கும் மேற்பட்ட எம்பிக்களுக்கு கொரோனா தொற்று... மாநிலங்களவை காலவரையின்றி ஒத்திவைப்பு
மாநிலங்களவை (கோப்புப்படம்)
  • News18
  • Last Updated: September 23, 2020, 6:35 PM IST
  • Share this:
மாநிலங்களவையில் நேற்று 7 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில் இன்று காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கடந்த 14ம் தேதி தொடங்கியது.

மக்களவை, மாநிலங்களவை தினமும் 4 மணி நேரம் மட்டுமே கூடின. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கமான வார விடுமுறையின்றி இரு அவைகளும் இயங்கி வந்தன.


இதற்கிடையே, 25-க்கும் மேற்பட்ட எம்பிக்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் அக்டோபர் ஒன்றாம் தேதி முடிவடைய உள்ள கூட்டத்தொடரை இன்றுடன் முடித்துக் கொள்ள மத்திய அரசு திட்டமிட்டது.Also read... தமிழகம் உள்ளிட்ட 7 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை..

அதன்படி, மாநிலங்களவை இன்று பிற்பகலுடன் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. நடப்பு மழைக்கால கூட்டத்தொடரில் 19 மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டன.முன்னதாக எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு மத்தியில் வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அப்போது ரகளையில் ஈடுபட்டதாக 8 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தில் அவை நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.
First published: September 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading