• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • இந்திய இறையாண்மையை ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது - சீன பாதுகாப்புத்துறை அமைச்சரிடம் ராஜ்நாத் சிங் திட்டவட்டம்

இந்திய இறையாண்மையை ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது - சீன பாதுகாப்புத்துறை அமைச்சரிடம் ராஜ்நாத் சிங் திட்டவட்டம்

ராஜ்நாத் சிங்

ராஜ்நாத் சிங்

இந்தியாவின் ஒருமைப்பாட்டையும், இந்திய இறையாண்மையையும் விட்டுக்கொடுக்க முடியாது என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சீன பாதுகாப்புத்துறை அமைச்சரிடம் உறுதியாக தெரிவித்துள்ளார்.

  • Share this:
    இந்திய - சீன எல்லையான லடாக் பகுதியில் கடந்த சில மாதங்களாக இருநாடுகளுக்கு இடையே பதற்றம் நீடித்துவருகிறது. ஏற்கெனவே, ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் ஏராளமான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

    இந்தநிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ரஷ்யா சென்றுள்ளார். அங்கே, நேற்று சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜென்ரல் வெய் ஃபெங்கியுடன் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

    அப்போது, ராஜ்நாத் சிங் பேசியதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், ‘எல்லையில் அதிகளவில் ராணுவத்தை குவிப்பது மற்றும் அத்துமீறலில் ஈடுபட்டு தற்போதைய சூழ்நிலையை மாற்ற முயற்சி செய்வது போன்ற சீனாவின் நடவடிக்கைகள், இரு தரப்பு ஒப்பந்தத்தை மீறுவதாகும். எல்லை நிர்வாகத்தில் இந்திய படைகள், பொறுப்பான அணுகுமுறையை கையாள்கின்றன. இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதில் நமக்கு உள்ள உறுதியில், எந்த சந்தேகமும் இல்லை.

    தூதரகம் மற்றும் ராணுவ ரீதியில் இந்தியா பேச்சுவார்த்தை நடத்துவதுடன், எல்லையில், முற்றிலுமாக படைகளை வாபஸ் பெறுவதுடன் மற்றும் பதற்றத்தை தணித்து முழுமையான அமைதியை கொண்டு வர வேண்டும்.

    இந்திய சீன எல்லையில் அமைதியும் ஸ்திரத்தன்மையும் நிலவ இரு நாடுகளும் நடவடிக்கை எடுப்பதுடன், கருத்து வேறுபாடுகள், பிரச்னையாக உருவெடுப்பதை இரு நாடுகளும் அனுமதிக்கக்கூடாது. எல்லையில் தற்போதைய சூழலை முறையாக கையாள வேண்டும். எல்லை பிரச்னை இன்னும் பெரிதாகவோ, சிக்கலாகும் வகையிலோ மாற்றக்கூடாது.


    இருதரப்பு ஒப்பந்தப்படி,எல்லையில் பாங்காங் ஏரி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் படைகளை விரைவாக திரும்ப பெறுவதில், இந்தியாவுடன் இணைந்து சீனா பணியாற்ற வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: