இந்த நிபந்தனையை நிறைவேற்றினால் பாக். உடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் – ராஜ்நாத் சிங்

தீவிரவாத தலைவனான மசூத் அஸாரை பாகிஸ்தான் இந்தியாவிடம் ஒப்படைத்தால் மட்டுமே அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை என்று சுஷ்மா ஸ்வராஜ் கூறியிருந்தார்.

news18
Updated: March 16, 2019, 2:20 PM IST
இந்த நிபந்தனையை நிறைவேற்றினால் பாக். உடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் – ராஜ்நாத் சிங்
ராஜ்நாத் சிங்
news18
Updated: March 16, 2019, 2:20 PM IST
பாகிஸ்தானுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த இந்தியா எப்போதும் தயாராகவே உள்ளது. ஆனால், தீவிரவாத கூடாரங்களை பாகிஸ்தான் அரசு அழிக்க முன்வந்தால், நிச்சயம் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என நெட்வொக் 18 குழுமத்துக்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்தார்.

நெட்வொர்க் 18 குழுமத்தின் தலைமை ஆசிரியர் ராகுல் ஜோஷி நடத்திய நேர்காணலில் பங்கேற்ற உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாலகாட் தாக்குதல், இம்ரான் கானின் அமைதி பேச்சுவார்த்தை உள்ளிட்ட பல விசயங்கள் குறித்து விளக்கமளித்துள்ளார்.

மேலும், புல்வாமா தாக்குதல் வரும் மக்களவை தேர்தலில் அரசியல் பிரசாரமாக ஆக்கப்படாது என்பதையும், நாட்டில் உள்ள அனைத்து தலைவர்களும், கட்சியினரும் இதனை உறுதியாக கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் எல்லையில் இந்தியா நடத்திய வான் தாக்குதலால் பாகிஸ்தான் பயந்து நடுங்கியது தெள்ளத் தெளிவாகி உள்ளது.

இதற்காக, ஆதாரங்களை கேட்பது, தேசத்தின் பெருமையை சீர்குழைக்கும் செயலாக மாறிவிடும் மேலும், அதனை அரசியலாக்கக் கூடாது என்றார்.

பாகிஸ்தான் உடன் நல்லுறவை பேணவே இந்தியாவும் விரும்புகிறது. அதற்காக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் விடுத்துள்ள அமைதி பேச்சுவார்த்தையையும் இந்தியா மதிக்கிறது.

ஆனால், அவர்கள் ஒரு நிபந்தனைக்கு சம்மதம் தெரிவித்தால், மட்டும் தான் அவர்களுடைய அமைதி பேச்சுவார்த்தைக்கு சம்மதிக்க முடியும் என்று ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
Loading...
அந்த நிபந்தனை என்னவென்றால், தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் மண்ணில் இடமில்லை என்பதை அந்நாட்டு அரசு உறுதி படுத்த வேண்டும். எல்லையில், முகாமிட்டுள்ள தீவிரவாத முகாம்களை பாகிஸ்தான் ராணுவம் அழித்து விட்டது என்ற செய்தியை உறுதிபடுத்த வேண்டும் இந்த நிபந்தனைக்கு பாகிஸ்தான் அரசு ஒப்புக் கொண்டால், இந்தியா – பாகிஸ்தான் அமைதி பேச்சுவார்த்தை எந்த தடையும் இன்றி நடைபெறும் என்றார்.

முன்னதாக கடந்த வாரம் இது குறித்து பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர், சுஷ்மா ஸ்வராஜ், தீவிரவாத தலைவனான மசூத் அஸாரை பாகிஸ்தான் இந்தியாவிடம் ஒப்படைத்தால் மட்டுமே அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை குறித்து சிந்திக்க முடியும் என்றார்.



Also See:
First published: March 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...