இனி மீனவர்களுக்கும் 6 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை கிடைக்கும் - ராஜ்நாத் சிங்

இனி மீனவர்களுக்கும் 6 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை கிடைக்கும் - ராஜ்நாத் சிங்

ராஜ்நாத் சிங்

விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் 6 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை இனி 2 கோடி மீனவர்களுக்கும் கிடைக்கும் என பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் 6 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை இனி 2 கோடி மீனவர்களுக்கும் கிடைக்கும் என பாதுகாப்புதுறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

  தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் தீவிரமான ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, பாஜக சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

  அதன்படி கேரளாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராஜ்நாத் சிங் “விவசாயிகளுக்கு ஆண்டு தோறும் 6 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையை மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்தப் பணம் நேரடியாக அவர்களுடைய வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டு வருகிறது.

  மீனவர்களுக்கும் இதேபோன்ற திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி, மீன்வளத்துறை அமைச்சரிடம் கேட்டிருக்கிறார். மேற்குவங்கம், புதுச்சேரி மாநில பாஜக தேர்தல் அறிக்கைகளிலும் இது அறிவிக்கப்பட்டுள்ளது.

  இந்நிலையில், இனி மீனவர்களுக்கும் ஆண்டுதோறும் 6 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். அந்த பணம் நாட்டில் உள்ள 2 கோடி மீனவர்களுக்கு கிடைக்கும்.

  Must Read : அ.தி.மு.க எம்.எல்.ஏவிடம் ஜேசிபி ஆப்ரேட்டராக இருப்பவரின் வீட்டிலிருந்து ரூ.1 கோடி பறிமுதல் - திருச்சி அரசியல் களத்தில் பரபரப்பு

   

  மீன்வளத்துறை அமைக்கப்பட்டு இருக்கின்ற விவரம் கூட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு தெரியவில்லை. 2019ஆம் ஆண்டிலேயே இந்த துறை உருவாக்கப்பட்டுவிட்டது. கேரளா மாநில தங்கக்கடத்தல் வழக்கை மத்திய புலனாய்வு அமைப்புகள் விசாரிக்கக் கூடாது என்று கேரள மாநில அரசு கூறுவது சரியானது அல்ல.” இவ்வாறு கூறினார் ராஜ்நாத்சிங்.
  Published by:Suresh V
  First published: