ஹோம் /நியூஸ் /இந்தியா /

இந்தியாவின் உற்பத்தித் திறனுக்கு மோர்முகா கப்பல் ஓர் எடுத்துக்காட்டு: ராஜ்நாத் சிங் பெருமிதம்

இந்தியாவின் உற்பத்தித் திறனுக்கு மோர்முகா கப்பல் ஓர் எடுத்துக்காட்டு: ராஜ்நாத் சிங் பெருமிதம்

ஐ.என்.எஸ். மோர்முகாவை நாட்டுக்கு அர்பணித்தார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

ஐ.என்.எஸ். மோர்முகாவை நாட்டுக்கு அர்பணித்தார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

மோர்முகா கப்பல், தற்போதைய தேவைகளை மட்டுமல்லாமல், எதிர்காலத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Mumbai, India

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன போர்க் கப்பலான ஐ.என்.எஸ். மோர்முகாவை, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டுக்கு அர்ப்பணித்தார். உள்நாட்டுப் பாதுகாப்பில், இந்தியாவின் உற்பத்தித் திறனுக்கு மோர்முகா கப்பல் ஓர் எடுத்துக்காட்டு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் மற்றும் ராணுவ செயல்பாடுகள் அதிகரித்து வரும் நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை இந்திய கடற்படை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கோவாவில் பழமையான துறைமுகம் அமைந்துள்ள மோர்முகா எனும் இடத்தின் பெயரில், உள்நாட்டிலேயே ஐ.என்.எஸ். மோர்முகா கப்பல் தயாரிக்கப்பட்டுள்ளது.

மோர்முகா அதிநவீன போர் கப்பல், 163 மீட்டர் நீளமும் 17 மீட்டர் அகலமும் கொண்டது. 7 ஆயிரத்து 400 டன் எடை கொண்ட மோர்முகா கப்பல், இந்தியாவில் உருவாக்கப்பட்ட சக்திவாய்ந்த போர்க்கப்பல்களில் ஒன்றாகும். மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாக மோர்முகா போர்க்கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் முக்கிய சிறப்பம்சமாக, அதிநவீன ரேடார் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: டெல்லியில் மீட்டிங்.. ராகுல் காந்தியுடன் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்கும் கமல்ஹாசன்!

 

இந்த ரேடார் கருவிகள் மூலம், தரை மற்றும் வானில் உள்ள இலக்குகளை எளிதில் தாக்கும் வகையில் பிரமோஸ் ஏவுகணை தளவாடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், நீர்மூழ்கி குண்டுகள், ராக்கெட் லாஞ்சர்கள் மற்றும் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், நீர்மூழ்கி கப்பல்களை அழிக்கும் திறன் கொண்ட ஹெலிகாப்டர்களும் மோர்முகா போர்க் கப்பலுடன் இணைக்கப்பட்டுள்ளன.

இவை மட்டுமின்றி, அணு ஆயுதங்கள் மற்றும் உயிரியல் போர்முறையை எதிர்கொள்ளும் வகையில் பல்வேறு அதிநவீன தொழில்நுட்பங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இந்திய கப்பற்படையில் உள்ள எதிரிகளைத் தாக்கி அழிக்கும் மிகப்பெரிய கப்பல்களில் ஒன்றாக மோர்முகா கருதப்படுகிறது. இந்தக் கப்பலை, மும்பை கப்பல் கட்டுமான தளத்தில் வைத்து, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இதையும் படிங்க: ஒவ்வோர் ஆண்டும் நூற்றுக்கணக்கானோர் ஆணவக் கொலை... தலைமை நீதிபதி வேதனை

இந்நிகழ்ச்சியில், முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சவுகான், கடற்படை தலைமை தளபதி ஹரிகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங், மோர்முகா கப்பல், தற்போதைய தேவைகளை மட்டுமல்லாமல், எதிர்காலத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் என தெரிவித்தார். உள்நாட்டுப் பாதுகாப்பில், இந்தியாவின் உற்பத்தி திறனுக்கு மோர்முகா கப்பல் ஓர் எடுத்துக்காட்டு என தெரிவித்த அவர், எதிர்காலத்தில், உலக நாடுகளுக்கு இந்தியா கப்பல்களை கட்டிக் கொடுக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

First published:

Tags: Mumbai, Rajnath singh