• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • 'விக்ரஹா' ரோந்துக் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத் சிங்

'விக்ரஹா' ரோந்துக் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத் சிங்

 'விக்ரஹா' ரோந்துக் கப்பல்

'விக்ரஹா' ரோந்துக் கப்பல்

கடந்த 2008-ம் ஆண்டு நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பிறகு, கடல் வழியாக எந்தவொரு தீவிரவாத ஊடுருவலும் நடைபெறவில்லை என்று பெருமிதம் தெரிவித்தார்.

  • Share this:
    உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட 'விக்ரஹா' ரோந்துக் கப்பலை, இந்திய கடலோர காவல் படைக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அர்ப்பணித்தார். இதன்மூலம், கடற்படையின் பாதுகாப்பு அதிகரிக்கும் என ராஜ்நாத் சிங் கூறினார்.

    சென்னையில் உள்ள எல் அன்ட் டி கப்பல் கட்டும் தொழிற்சாலையால் உருவாக்கப்பட்ட ஏழாவது ரோந்து கப்பல் "விக்ரஹா". ஏற்கெனவே 'விக்ரம்', 'விஜயா' 'வீரா', 'வராஹா', 'வரத்', 'வஜ்ரா' ஆகிய 6 ரோந்து கப்பல்கள் பாதுகாப்புப் படையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக188 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உள்நாட்டிலேயே விக்ரஹா கப்பல் தயாரிக்கப்பட்டுள்ளது.

    இதன் தொடக்க நிகழ்ச்சி சென்னை துறைமுகத்தில் நடைபெற்றது. மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பங்கேற்று, கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்து, அதன் ஓட்டத்தைத் தொடங்கி வைத்தார். பின்னர் கடலோர காவல் படையிடம் விக்ரஹா ரோந்துக் கப்பல் ஒப்படைக்கப்பட்டது. அப்போது, இந்திய கடலோர காவல் படையின் தலைமை இயக்குநர் நடராஜன், கிழக்கு பிராந்திய ஐ.ஜி., ஆனந்த் படோலா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    Also Read : பஞ்சாப் காங்கிரஸில் உச்சகட்டத்தில் உட்கட்சி மோதல்: 58 எம்.எல்.ஏக்களுடன் மாஸ் காட்டும் அமரீந்தர் சிங்

    ஆந்திர பிரதேச மாநிலத்தின் விசாகப்பட்டினத்தை தலைமையிடமாகக் கொண்டு விக்ரஹா ரோந்து கப்பல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 98 மீட்டர் நீளமுள்ள ரோந்துக் கப்பலில் 11 அதிகாரிகளுடன் 110 மாலுமிகள் இருப்பார்கள்.  நவீன தொழில்நுட்ப ரேடார்கள், தொலைத்தொடர்பு மற்றும் பயணக் கருவிகள், சென்சார்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இந்தக் கப்பலில் இடம்பெற்றுள்ளன. போஃபர்ஸ் துப்பாக்கி ஒன்றும், 12 புள்ளி 7 மில்லிமீட்டர் ரிமோட் கண்ட்ரோல் துப்பாக்கிகள் இரண்டும் இந்தக் கப்பலில் இருக்கும். இவைதவிர ஒரு ஹெலிகாப்டர் மற்றும் நான்கு அதிவேக படகுகளை சுமந்து செல்லும் வகையில் கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    Also Read : அமிதாப் பச்சனின் பாடிகார்டுக்கு ரூ.1.5 கோடி சம்பளமா?- விசாரணை, டிரான்ஸ்பருக்கு உத்தரவு

    இந்த நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியாவில் கடந்த 2008-ம் ஆண்டு நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பிறகு, கடல் வழியாக எந்தவொரு தீவிரவாத ஊடுருவலும் நடைபெறவில்லை என்று பெருமிதம் தெரிவித்தார். இந்த ரோந்துக் கப்பல் மூலம், இந்திய கடற்பகுதியின் பாதுகாப்பு அதிகரிக்கும் என்ற அவர், ஆயிரக்கணக்கான உயிர்களை காக்க முடியும் என்றும் கூறினார்.

    பாதுகாப்பு உபகரணங்களை உற்பத்தி செய்வதில் நாம் அதிகமான ஆர்வம் காட்ட வேண்டும் எனவும் ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் விக்ரஹா கப்பலுடன் சேர்த்து 157 கப்பல்கள் மற்றும் 66 விமானங்கள் இந்திய கடலோர காவல் படையிடம் ஒப்படைக்கபட்டது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: