முதல் ரஃபேல் போர் விமானம் இன்று இந்தியாவிடம் ஒப்படைப்பு! பிரான்ஸுக்கு சென்றார் ராஜ்நாத் சிங்

ரபேல் விமானத்தை பிரான்ஸ் அரசு முறையாக இந்தியாவிடம் ஒப்படைத்தாலும், நிர்வாக நடைமுறைகள் பூர்த்தி செய்யப்பட்ட பின் அடுத்த ஆண்டு மே மாதமே ரஃபேல் விமானம் இந்தியாவுக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் ரஃபேல் போர் விமானம் இன்று இந்தியாவிடம் ஒப்படைப்பு! பிரான்ஸுக்கு சென்றார் ராஜ்நாத் சிங்
ரஃபேல் போர் விமானத்தை வாங்க பிரான்ஸ் சென்றார் ராஜ்நாத் சிங்
  • News18
  • Last Updated: October 8, 2019, 10:03 AM IST
  • Share this:
சரஸ்வதி பூஜை தினமான இன்று பிரான்சிடம் இருந்து ரஃபேல் போர் விமானத்தை இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெற்றுக்கொள்கிறார்.

பிரான்சிடம் இருந்து 63,460 கோடி ரூபாய் செலவில் 36 ரஃபேல் ரக போர் விமானங்களை வாங்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது.

முதல் விமானத்தை 36 மாதங்களுக்குள்ளும் அனைத்து விமானங்களையும் 67 மாதங்களுக்குள் தயாரித்து ஒப்படைத்து விட வேண்டும் என்பது ஒப்பந்தமாகும். இதன்படி, தயாரிக்கப்பட்ட முதல் ரஃபேல் போர் விமானம் இன்று இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.


சரஸ்வதி பூஜை மற்றும் இந்திய விமானப் படை நிறுவப்பட்ட இன்றைய தினத்தில் ரஃபேல் போர் விமானத்தை வாங்குவதற்காக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் பயணமாக பிரான்ஸ் சென்றார். தலைநகர் பாரிஸ் விமான நிலையத்தில் அவரை பிரான்ஸ் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

பாரிஸில் இன்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை சந்திக்கும் ராஜ்நாத் சிங், இருநாடுகள் இடையே பாதுகாப்பு மற்றும் ராணும் சார்ந்த உறவுகளை பலப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

அதைத் தொடர்ந்து பிரான்ஸ் தலைநகர் பாரிஸிலிருந்து 590 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மெரிக்னா பகுதியில் ரஃபேல் விமான ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் உடன் பிரான்ஸ் நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் ப்ளோரண்ட்ஸ் பார்லி கலந்துகொள்கிறார். அப்போது, விமானத்துக்கு இருவரும் இணைந்து பூஜை போட்டு கொண்டாடவுள்ளனர்.

இந்திய பிரான்ஸ் நாட்டு அதிகாரிகள், டசால்ட் ஏவியேஷன் நிறுவன அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளனர். இதன் பின் ரஃபேல் போர் விமானத்தில் ராஜ்நாத் சிங் பறக்க உள்ளார்.

ரபேல் விமானத்தை பிரான்ஸ் அரசு முறையாக இந்தியாவிடம் ஒப்படைத்தாலும், நிர்வாக நடைமுறைகள் பூர்த்தி செய்யப்பட்ட பின் அடுத்த ஆண்டு மே மாதமே ரஃபேல் விமானம் இந்தியாவுக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபிரான்சிடமிருந்து வாங்கப்படும் 36 ரஃபேல் விமானங்களில் 18 விமானங்கள் அம்பாலா விமானப்படை தளத்தில் நிறுத்தப்பட உள்ளன. வியூக முக்கியத்துவம் வாய்ந்த இந்த விமானப் படை தளம் இந்திய-பாகிஸ்தான் எல்லையில் இருந்து 220 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

மீதமுள்ள 18 விமானங்கள் மேற்கு வங்கத்தில் Hasimara விமானப்படை தளத்தில் நிறுத்தப்பட உள்ளன. இந்த இரு விமானப்படை தளங்களிலும் 400 கோடி ரூபாய் செலவில், ரஃபேல் போர் விமானங்களை நிறுத்திவைப்பதற்கான கட்டமைப்புகள், பராமரிப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Also see...

First published: October 8, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading